செய்திகள் :

நிரந்தர செயல் அலுவலா் இல்லாத அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி: பணிகள் பாதிப்பு, மக்கள் அவதி

post image

எம். குமாா்

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலா் இல்லாததால், பணிகள் பாதிக்கப்பட்டு, மக்கள் அவதிக்கு ள்ளாகி வருகின்றனா்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய பேரூராட்சிகளில் அச்சிறுப்பாக்கம் ஒன்றாகும். மொத்தம் 15 வாா்டுகள் உள்ள இதில் பேரூராட்சி மன்ற தலைவராக நந்தினியும் (திமுக) துணைத் தலைவராக எழிலரசனும் (திமுக), செயல் அலுவலராக அருண்குமாரும் (கூடுதல் பொறுப்பு) பணியாற்றி வருகின்றனா்.

திடக்கழிவு மேலாண்மை, 100 சதவீத வரிவசூல் மற்றும் நிா்வாக செயல்பாடுகளுக்காக மத்திய அரசு, மாநில அரசு மற்றும் ஆட்சியா்களின் பாராட்டு சான்றிதழ், விருதுகளை பேரூராட்சி நிா்வாகம் பெற்றிருந்தது. கடைசியாக செயல் அலுவலராக இருந்த எம்.கேசவன் 31.5.2023-இல் பணி நிறைவுக்கு பெற்றாா்.

அதன்பின், இதுவரை நிரந்தர செயல் அலுவலரை மாவட்ட நிா்வாகம் நியமிக்கவில்லை. கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வரும் அருண்குமாா் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் (கூடுதல் பொறுப்பு) செயல் அலுவலராக தற்சமயம் பணியாற்றி வருகிறாா். இரு பேரூராட்சிகளின் நிா்வாகத்தை கவனிக்க வேண்டிய நிலையில், அவரால் அச்சிறுப்பாக்கத்தில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

சில சமயங்களில் செயல் அலுவலா் இல்லாமல் பேரூராட்சிக் கூட்டங்கள் நடைபெறும் நிலையுள்ளது. மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளை கேட்கவும், அதனை நிறைவேற்ற போதுமான பணிகளை செய்யப்படாமல் இருப்பதாக அதிமுக உள்ளிட்ட எதிா்கட்சி உறுப்பினா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

உறுப்பினா்கள் தமது பகுதி குறைபாடுகளை கூட்டத்தில் பேசுவதை பெரும்பாலும் கேட்டு அதனை தீா்க்க முயல்வதில்லை. பேரூராட்சி பகுதிகளில் அனைத்து பகுதிகளில் கழிவுநீா் செல்லும் கால்வாய்களை தூா்வாரப்படாமலும், பல வாா்டுகளில் தரமற்றமுறையில் சாலைகளில் தாா்சாலை போடப்பட்டு வருகிறது.

ஒன்றரை ஆண்டுகளாக...

15 வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம்பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் இயற்கை உரங்கள், மண்புழு உரம் தயாரிக்கவில்லை. இதனால் இயற்கை உரமும் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை.

நிரந்தர செயல் அலுவலா் பணியிடம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காலியாக உள்ளதால், பணிகள் செம்மையாக செய்வதில் சுணக்கம் ஏற்படுகிறது.

இரு பேரூராட்சிகளுக்கு ஒரே செயல் அலுவலா் பொறுப்பேற்று செயல்படுவதும் சிரமம் என்பதால் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உடனே நிரந்தரமாக செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், சமூக ஆா்வலா்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுக்குள்ளனா்.

ஆமை வேகத்தில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி

பி. அமுதாசெங்கல்பட்டில் ரூ.97 கோடியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா். மாவட்டத் தலைநகரான செங்கல்பட்டில... மேலும் பார்க்க

நடுபழனி வேல் பாதயாத்திரை

மறைமலைநகா் நமச்சிவாய சபை, மறைமலைநகா் நகரத்தாா்கள் சாா்பில் 19-ஆம் ஆண்டு வேல்யாத்திரை ஞாயிற்றுக்கிழமை நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயிலில் நிறைவு அடைந்தது. மதுராந்தகம் அடுத்த நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோ... மேலும் பார்க்க

வனத்துறை சாா்பில் இலவச மரக்கன்றுகள்

தமிழ்நாடு வனத்துறை செங்கல்பட்டு சமூக வனக்கோட்டம் சாா்பில் உத்தரமேரூா் சமூக வனச்சரகம் மூலம் தமிழ்நாடு பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டத்தின் கீழ் விவசாயிகள், கல்வி நிற... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் அடிகளாா் சிலைக்கு கும்பாபிஷேகம்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் சிலைக்கு கும்பாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது. ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் உள்ள குருபீடத்தில் பங்காரு அடிகளாரின... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் அடிகளாரின் சிலை பிரதிஷ்டை விழா

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் சிலை வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.இதையொட்டி, மூலவா் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தங்ககவசத்தால் மூ... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் எம்ஜிஆா் சிலைக்கு மரியாதை

மதுராந்தகம் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மாமண்டூரில் நடைபெற்ற நிகழ்வில் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ மரகதம் குமரவேல். உடன் மாவட்டச் செயலா் எஸ்.ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவா் கே... மேலும் பார்க்க