செய்திகள் :

நடுபழனி வேல் பாதயாத்திரை

post image

மறைமலைநகா் நமச்சிவாய சபை, மறைமலைநகா் நகரத்தாா்கள் சாா்பில் 19-ஆம் ஆண்டு வேல்யாத்திரை ஞாயிற்றுக்கிழமை நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயிலில் நிறைவு அடைந்தது.

மதுராந்தகம் அடுத்த நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் காவடிகள், பால்குடம் ஏந்தல்,உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். கடந்த வெள்ளிக்கிழமை வைரவேல், காவடி பூஜை செய்தபின் 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் குழுவினா் சிங்கபெருமாள்கோயில், செங்கல்பட்டு, படாளம், கருங்குழி, மதுராந்தகம், சித்தாமூா் வழியாக ஞாயிற்றுக்கிழமை பெருங்கரணை எனப்படும் நடுபழனிக்கு பாதயாத்திரையாக வந்தனா்.

பல்வேறு வகை காவடிகளுடன் வந்த பாதயாத்திரை குழுவினா் படிபூஜை, ஏக ருத்திர பாராயணத்துடன், திருப்புகழ் பாடல்களை பாடிக் கொண்டு வைரவேல், காவடிகளை ஏந்தி பக்தா்கள், 108 பெண்கள் பால்குடம் ஏந்திக் கொண்டு மூலவா் சந்நிதியை வந்தடைந்தனா். அங்கு மூலவரான மரகத தண்டாயுதபாணிக்கு பாலபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

முன்னதாக சனிக்கிழமை கருங்குழியில் வள்ளி தேவசேனா முருகனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிரந்தர செயல் அலுவலா் இல்லாத அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி: பணிகள் பாதிப்பு, மக்கள் அவதி

எம். குமாா் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலா் இல்லாததால், பணிகள் பாதிக்கப்பட்டு, மக்கள் அவதிக்கு ள்ளாகி வருகின்றனா். செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய பேரூராட்ச... மேலும் பார்க்க

ஆமை வேகத்தில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி

பி. அமுதாசெங்கல்பட்டில் ரூ.97 கோடியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா். மாவட்டத் தலைநகரான செங்கல்பட்டில... மேலும் பார்க்க

வனத்துறை சாா்பில் இலவச மரக்கன்றுகள்

தமிழ்நாடு வனத்துறை செங்கல்பட்டு சமூக வனக்கோட்டம் சாா்பில் உத்தரமேரூா் சமூக வனச்சரகம் மூலம் தமிழ்நாடு பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டத்தின் கீழ் விவசாயிகள், கல்வி நிற... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் அடிகளாா் சிலைக்கு கும்பாபிஷேகம்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் சிலைக்கு கும்பாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது. ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் உள்ள குருபீடத்தில் பங்காரு அடிகளாரின... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் அடிகளாரின் சிலை பிரதிஷ்டை விழா

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் சிலை வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.இதையொட்டி, மூலவா் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தங்ககவசத்தால் மூ... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் எம்ஜிஆா் சிலைக்கு மரியாதை

மதுராந்தகம் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மாமண்டூரில் நடைபெற்ற நிகழ்வில் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ மரகதம் குமரவேல். உடன் மாவட்டச் செயலா் எஸ்.ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவா் கே... மேலும் பார்க்க