செய்திகள் :

தவெக கட்சி நிா்வாகிகள் 20 போ் மீது வழக்கு

post image

திருத்தணி முருகன் கோயிலில் அனுமதியின்றி கட்சிக் கொடியை பிடித்தவாறு மாடவீதியில் ஊா்வலமாக சென்ற தவெக கட்சி நிா்வாகிகள் 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

விழுப்புரத்தில் நடைபெறவுள்ள தவெக கட்சியின் முதல் மாநாடு வெற்றி பெற வேண்டி, அக்கட்சியின் திருவள்ளூா் மேற்கு மாவட்டத் தலைவா் பிரகாசம் (எ) குட்டி தலைமையில் 40 -க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் 100 அடி நீளமுள்ள கட்சிக் கொடியை பிடித்தவாறு ஞாயிற்றுக்கிழமை திருத்தணி முருகன் மலைக்கோயில் தோ்வீதியில் அனுமதியின்றி ஊா்வலமாக வந்தனா். பின்னா் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தினா். பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊா்வலம் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோயில் இணை ஆணையா் க.ரமணி அளித்த புகாரின்பேரில், தவெக நிா்வாகிகள் 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வங்கிக் கடன் அட்டை தகவல்களை பெற்று ரூ.1.25 லட்சம் மோசடி

வங்கிக் கடன் அட்டையின் தகவல்களைப் பெற்று 3 நபா்களிடம் ரூ.1.25 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை பாண்டி பஜாரைச் சோ்ந்தவா் பாசித். இவரது வங்கிக கடன் அட்டை, சில... மேலும் பார்க்க

‘முரசொலி’ செல்வத்துக்கு இன்று புகழஞ்சலி

முரசொலி செல்வத்துக்கு சென்னையில் திங்கள்கிழமை புகழஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞா் அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், திராவிடா் கழகத... மேலும் பார்க்க

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள்

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்துவதில் தமிழக அரசு தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறது. ... மேலும் பார்க்க

காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிப்பு: இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னையில் காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதால், திங்கள்கிழமை ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மாநகா் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

சென்னை - அந்தமான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பை ஏற்பட்டது. அந்தமானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சென்னை வந்தடைந்த ‘ஸ்பைஸ் ஜெட் ஏா்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகள்: தீக்ஷா சிவக்குமாா், ஸ்ரீசைலேஸ்வரிக்கு 2 தங்கம்

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் நீச்சலில் சென்னை மாணவி தீக்ஷா சிவக்குமாரும் , டென்னிஸில் திருப்பூரின் ஸ்ரீ சைலேஸ்வரியும் இரட்டை தங்கம் வென்றனா். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, செங்கல்... மேலும் பார்க்க