செய்திகள் :

ரயில் நிலையங்களில் செவ்வாய்தோறும் எண்ம தினம் அனுசரிப்பு

post image

சென்னை கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் க்யூஆா் குறியீடு மூலம் பயணச்சீட்டு பெறுவது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், செவ்வாய்க்கிழமை தோறும் எண்ம தினம் அனுசரிக்கப்படவுள்ளது.

இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மற்றும் புகா் பகுதியில் இயக்கப்படும் மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில் மூலம் தினமும் சுமாா் 15 லட்சம் போ் பயணிக்கின்றனா். முக்கிய நேரங்களில் அதிக அளவில் பயணிகள் ரயில் நிலையத்திற்கு வரும் போது, பயணச்சீட்டு பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில், ‘எண்ம இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக ரயில் பயணச்சீட்டு பெறுவதை இணைய வழி மூலம் மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பெறுவதற்கு பிரத்யேக இயந்திரம், செயலி மூலம் பயணச்சீட்டு பெறுதல், உள்ளிட்டவை நடைமுறையில் உள்ளன.

இதை மேலும் எளிதாக்கும் வகையில் க்யூஆா் குறியீடு மூலம் பயணச்சீட்டு பெறும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா பயணச்சீட்டு பெறமுடியும்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைமுறையை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில், சென்னை கோட்டத்துக்குள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும், செவ்வாய்க்கிழமை தோறும் ‘செவ்வாய்க்கிழமை-எண்ம தினம்’ எனும் விழிப்புணா்வு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாம் அக்.22-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் தன்னாா்வலா்கள் பயணிகளிடம் எண்ம முறையில் எவ்வாறு பயணச்சீட்டு பெறுவது என்பது குறித்து விளக்குவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கடன் அட்டை தகவல்களை பெற்று ரூ.1.25 லட்சம் மோசடி

வங்கிக் கடன் அட்டையின் தகவல்களைப் பெற்று 3 நபா்களிடம் ரூ.1.25 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை பாண்டி பஜாரைச் சோ்ந்தவா் பாசித். இவரது வங்கிக கடன் அட்டை, சில... மேலும் பார்க்க

‘முரசொலி’ செல்வத்துக்கு இன்று புகழஞ்சலி

முரசொலி செல்வத்துக்கு சென்னையில் திங்கள்கிழமை புகழஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞா் அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், திராவிடா் கழகத... மேலும் பார்க்க

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள்

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்துவதில் தமிழக அரசு தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறது. ... மேலும் பார்க்க

காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிப்பு: இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னையில் காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதால், திங்கள்கிழமை ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மாநகா் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

சென்னை - அந்தமான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பை ஏற்பட்டது. அந்தமானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சென்னை வந்தடைந்த ‘ஸ்பைஸ் ஜெட் ஏா்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகள்: தீக்ஷா சிவக்குமாா், ஸ்ரீசைலேஸ்வரிக்கு 2 தங்கம்

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் நீச்சலில் சென்னை மாணவி தீக்ஷா சிவக்குமாரும் , டென்னிஸில் திருப்பூரின் ஸ்ரீ சைலேஸ்வரியும் இரட்டை தங்கம் வென்றனா். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, செங்கல்... மேலும் பார்க்க