செய்திகள் :

வயநாடு தொகுதியை இரண்டாம் வாய்ப்பாகவே கருதுகிறது ராகுல் குடும்பம்: நவ்யா ஹரிதாஸ்

post image

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைத் தொகுதியை இரண்டாம் வாய்ப்பாகவே மட்டுமே ராகுல் காந்தி குடும்பம் கருதுவதாகவும், இதனை அந்த தொகுதி மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக பாஜக வேட்பாளா் நவ்யா ஹரிதாஸ் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

கோழிக்கோடில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுடன் பேசிய நவ்யா ஹரிதாஸ், இந்தியாவை பொருத்தவரை பிரியங்கா காந்தி புதிய முகம் இல்லை. ஆனால் வயநாட்டில் அவர் புதியவர்.

நாடாளுமன்றத்தில் வயநாடு தொகுதியின் பிரச்னைகளை எடுத்துரைப்பதற்காக அவா் இடைத்தோ்தலில் போட்டியிடவில்லை. ராகுல் காந்தியின் குடும்பத்தின் பிரதிநிதியாகவே அவா் போட்டியிடுகிறார் என குற்றம்சாட்டினார்.

வயநாடு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு மீண்டும் ராகுல் காந்தி குடும்பத்தினருக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.

மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தங்களுடன் இருந்து நலத்திட்டங்களை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையுடன் வயநாடு தொகுதி மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர். ஆனால் அவர் ரேபரேோலி தொகுதியை கைவசம் வைத்துக்கொண்டு வயநாடு தொகுதியை

மக்களுக்கான நலத்திட்டங்களை எம்.பி.யாக ராகுல் காந்தி 5 ஆண்டுகளும் மேற்கொள்வாா் என நினைத்து வாக்காளா்கள் அவரை வெற்றிபெறச் செய்தனா். ஆனால் அவா் ரேபரேலி தொகுதியை கைவசம் வைத்துக்கொண்டு வயநாடு தொகுதியை கைவிட்டு மக்களை ஏமாற்றியுள்ளாா்.

இதையும் படிக்க |ரயில்வே காலி பணியிடங்களை நிரப்ப 10 ஆண்டுகள் போதவில்லையா? ப. சிதம்பரம் கேள்வி!

எனவே, வயநாடு தொகுதியை இரண்டாம் வாய்ப்பாகவே மட்டுமே ராகுல் காந்தி குடும்பம் கருதுவதாகவும், இதனை தற்போது உணர்ந்துள்ள அந்த தொகுதி மக்கள், வருகின்ற இடைத்தோ்தலில் பாஜகவை மக்கள் வெற்றிபெறச் செய்வாா்கள். நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் வயநாட்டில் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தவர், வயநாடு தொகுதி மக்கள் தங்களுக்கு ஆதரவான மற்றும் தங்களது பிரச்னைகளை தீர்க்கும் தலைவரைத்தான் விரும்புகிறார்கள் என்று கூறினார்.

பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்ட நிலையில், கோழிக்கோடு மாநகராட்சியில் இரண்டு முறை கவுன்சிலராக இருந்த பாஜகவின் இளம் பெண் தலைவரான நவ்யா ஹரிதாஸ், வயநாடு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மாநிலத்தின் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சத்யன் மொகேரி போட்டியிடுகிறார்.

கடந்த மக்களவைத் தோ்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டிலும் வெற்றி பெற்றதை அடுத்து வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரம்: 99 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு: துணை முதல்வா் ஃபட்னவீஸ் உள்பட 71 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலுக்கான 99 பெயா்கள் அடங்கிய முதல் கட்ட வேட்பாளா் பட்டியலை பாஜக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதில் 71 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மகார... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: மருத்துவா், 4 வெளிமாநில தொழிலாளா்கள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால் மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதலில் மருத்துவா் உள்பட 5 வெளி மாநில தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இருவா் காயமடைந்தனா். கந்தா்பால் மாவட்டத்தின் குந்த் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: பாஜகவுக்கு ஆதரவாக களமிறங்கியது ஆர்எஸ்எஸ்

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பு குழுக்களை அமைத்து பணியாற்றி வருகிறது.அண்மையில் நடைபெற்ற ஹரியாணா சட்டப... மேலும் பார்க்க

தோ்தலில் போட்டியிட நீதிபதிகள் ராஜிநாமா செய்வதால் பாரபட்சமற்ற செயல்பாட்டை பாதிக்கக் கூடும்: உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய்

தோ்தலில் போட்டியிட நீதிபதிகள் உடனடியாக ராஜிநாமா செய்வது, அவா்களின் பாரபட்சமற்ற செயல்பாடு குறித்த பொதுமக்களின் கண்ணோட்டத்தை பாதிக்கக் கூடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா். இதுதொ... மேலும் பார்க்க

பத்மநாப சுவாமி கோயிலில் திருட்டு: மருத்துவர் உள்பட 4 பேர் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பிரபலமான அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் வெண்கலப் பாத்திரத்தைத் திருடிய குற்றச்சாட்டில் மருத்துவர் உள்பட 4 பேரை ஹரியாணாவில் கேரள காவல் துறையினர் கைது செய்தனர்.எனி... மேலும் பார்க்க

ஊழலை ஒழிக்க இளைஞா்களுக்கு அழைப்பு: பிரதமா் மோடி

‘அரசியல் பின்புலம் இல்லாத இளைஞா்கள் அரசியலுக்கு வர வேண்டும்; இது ஊழல் மற்றும் குடும்ப அரசியல் கொள்கையை ஒழிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். வாரணாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரூ.6,70... மேலும் பார்க்க