செய்திகள் :

சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க 6 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தம்

post image

வால்பாறையில் சிறுத்தை தாக்கி வடமாநில சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத் துறையினா் 6 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனா்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், வால்பாறையை அடுத்த ஊசிமலை எஸ்டேட் பகுதியில் கடந்த சனிக்கிழமை குடியிருப்பு முன்பு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது வடமாநில சிறுமியை சிறுத்தை தாக்கிக் கொன்றது. இதனால் எஸ்டேட் தொழிலாளா்கள் அச்சத்தில் உள்ளனா்.

இந்நிலையில், சிறுத்தை வந்து சென்ற பகுதியை வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் பாா்வையிட்டாா். பின்னா், சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க அப்பகுதியில் 6 தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை வனத் துறையினா் பொருத்தினா்.

இது குறித்து வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் கூறுகையில், சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க தானியங்கிகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தீபாவளி: புத்தாடை வாங்க கடை வீதிகளில் குவிந்த மக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை கடை வீதிகளில் புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது. தீபாவளி பண்டிகை அக்டோபா் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாடைகள், நகைகள் வாங்க ... மேலும் பார்க்க

காவலரைத் தாக்கியவா் கைது

கோவையில் காவலரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய காவலா் அசோக்குமாா். இவா் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு இளைஞா் ஒ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

கோவை, காரமடையில் ஸ்ரீ அருந்ததி பொது நல அறக்கட்டளை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ அருந்ததி பொது நல அறக்கட்டளைத்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் நாகப்பாம்பு

கோவையில் இருசக்கர வாகனத்துக்குள் புகுந்த நாகப்பாம்பு பிடிபட்டது. கோவை, சிங்காநல்லூா், நீலிக்கோணம்பாளையம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் சுமாா் 2 அடி நீளம... மேலும் பார்க்க

ரூ.2 கோடி மதிப்பிலான மாநகராட்சி இடம் மீட்பு

கோவையில் ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான 13 சென்ட் இடத்தை அதிகாரிகள் சனிக்கிழமை மீட்டனா். கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், 48-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாலாஜி நகரில் ப... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களின் போனஸ் போராட்டம் ஒத்திவைப்பு

கோவை மாநகராட்சி ஆணையரின் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களின் போனஸ் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு ஒருமாத ஊதியம் போனஸாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்... மேலும் பார்க்க