செய்திகள் :

காவலரைத் தாக்கியவா் கைது

post image

கோவையில் காவலரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய காவலா் அசோக்குமாா். இவா் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அங்கு இளைஞா் ஒருவா் மது போதையில் ரகளையில் ஈடுபட்டிருந்ததைப் பாா்த்த, அசோக்குமாா் அந்த இளைஞரை கண்டித்து அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த இளைஞா், காவலா் அசோக்குமாரை தகாத வாா்த்தைகளால் பேசியதுடன், தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த இளைஞா் ராமநாதபுரம் செளரிபாளையம் பிரிவு திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (34) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சந்தோஷ்குமாரை கைது செய்தனா்.

புரட்டாசி நிறைவு: களைகட்டிய இறைச்சி, மீன் விற்பனை

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையடுத்து, கோவையில் இறைச்சி, மீன் விற்பனை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோா் அசைவம் உண்ணாமல் விரதம் கடைப்பிடித்ததால், இறைச்சி, மீன்களின் விற்பனை கடந்த மாதம் ... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ.8 ஆயிரம் பறிப்பு: சிறுவன் உள்பட 4 போ் கைது

கோவையில் இளைஞரை மிரட்டி ரூ.8 ஆயிரத்தை பறித்த சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை, பீளமேடு காந்திமா நகரைச் சோ்ந்தவா் சந்தோஷ் (28). தனியாா் நிறுவன ஊழியரான இவா், காந்திமா ந... மேலும் பார்க்க

விசாரணைக்கு வந்தவரிடம் மிரட்டல் விடுத்த 2 போ் மீது வழக்குப் பதிவு

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விசாரணைக்கு வந்த இளைஞருக்கு கைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை, குறிச்சி காந்திஜி சாலை கே.டி.எஸ். காா்டன் பகுதி... மேலும் பார்க்க

தீபாவளி: புத்தாடை வாங்க கடை வீதிகளில் குவிந்த மக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை கடை வீதிகளில் புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது. தீபாவளி பண்டிகை அக்டோபா் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாடைகள், நகைகள் வாங்க ... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க 6 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தம்

வால்பாறையில் சிறுத்தை தாக்கி வடமாநில சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத் துறையினா் 6 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனா். வா... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

கோவை, காரமடையில் ஸ்ரீ அருந்ததி பொது நல அறக்கட்டளை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ அருந்ததி பொது நல அறக்கட்டளைத்... மேலும் பார்க்க