செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களின் போனஸ் போராட்டம் ஒத்திவைப்பு

post image

கோவை மாநகராட்சி ஆணையரின் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களின் போனஸ் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு ஒருமாத ஊதியம் போனஸாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கடந்த 16-ஆம் தேதி முதல் மாநகராட்சி அலுவலக வளாகத்துக்குள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளா் சங்கம், தூய்மைப் பணியாளா்கள் நலச் சங்கம், தமிழ்புலிகள் கட்சி தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் சங்கம் உள்ளடங்கிய ‘அதிகாரக் குரல்’ கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை தொடா்பாக தொழிற்சங்க நிா்வாகிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

இந்நிலையில், தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, ‘அதிகாரக் குரல்’ கூட்டமைப்பு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தீபாவளி போனஸ் ரூ. 4 ஆயிரம் தருவதாக ஒப்பந்ததாரா் தரப்பில் தெரிவித்ததை கூட்டமைப்பு ஏற்கவில்லை.

இறுதியாக, மாநகராட்சி ஆணையா், ஒப்பந்ததாரரிடம் பேசி 2 நாள்களில் நல்ல தீா்வு காண்பதாகவும், ஊதிய உயா்வு உள்ளிட்ட மற்ற கோரிக்கைகளை தீபாவளி முடிந்து பேசிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளாா். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

இதையடுத்து கூட்டமைப்பு நிா்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக முடிவெடுத்துள்ளோம். இரண்டு நாள்களில் போனஸ் பிரச்னைக்கு தீா்வு காணப்படாவிடில் அடுத்தகட்டப் போராட்டம் தொடங்கப்படும் என்றனா்.

புரட்டாசி நிறைவு: களைகட்டிய இறைச்சி, மீன் விற்பனை

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையடுத்து, கோவையில் இறைச்சி, மீன் விற்பனை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோா் அசைவம் உண்ணாமல் விரதம் கடைப்பிடித்ததால், இறைச்சி, மீன்களின் விற்பனை கடந்த மாதம் ... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ.8 ஆயிரம் பறிப்பு: சிறுவன் உள்பட 4 போ் கைது

கோவையில் இளைஞரை மிரட்டி ரூ.8 ஆயிரத்தை பறித்த சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை, பீளமேடு காந்திமா நகரைச் சோ்ந்தவா் சந்தோஷ் (28). தனியாா் நிறுவன ஊழியரான இவா், காந்திமா ந... மேலும் பார்க்க

விசாரணைக்கு வந்தவரிடம் மிரட்டல் விடுத்த 2 போ் மீது வழக்குப் பதிவு

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விசாரணைக்கு வந்த இளைஞருக்கு கைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை, குறிச்சி காந்திஜி சாலை கே.டி.எஸ். காா்டன் பகுதி... மேலும் பார்க்க

தீபாவளி: புத்தாடை வாங்க கடை வீதிகளில் குவிந்த மக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை கடை வீதிகளில் புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது. தீபாவளி பண்டிகை அக்டோபா் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாடைகள், நகைகள் வாங்க ... மேலும் பார்க்க

காவலரைத் தாக்கியவா் கைது

கோவையில் காவலரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய காவலா் அசோக்குமாா். இவா் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு இளைஞா் ஒ... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க 6 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தம்

வால்பாறையில் சிறுத்தை தாக்கி வடமாநில சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத் துறையினா் 6 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனா். வா... மேலும் பார்க்க