செய்திகள் :

பத்மநாப சுவாமி கோயிலில் திருட்டு: மருத்துவர் உள்பட 4 பேர் கைது

post image

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பிரபலமான அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் வெண்கலப் பாத்திரத்தைத் திருடிய குற்றச்சாட்டில் மருத்துவர் உள்பட 4 பேரை ஹரியாணாவில் கேரள காவல் துறையினர் கைது செய்தனர்.

எனினும், விசாரணையில் மருத்துவர் வேண்டுமென்று திட்டமிட்டு பாத்திரத்தை எடுத்து செல்லவில்லை என்று தெரிய வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பத்மநாப சுவாமி கோயிலில் பல்வேறு பூஜைகளின்போதும் சடங்குகளின்போதும் 'உருளி' என்று அழைக்கப்படும் விலைமதிப்பற்ற வெண்கலப் பாத்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த உருளி அண்மையில் திருடுபோனதைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் காவல் துறையிடம் புகார் அளித்தது. அதன்பேரில் காவல் துறையினர் பத்மநாப சுவாமி கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து, குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.

உருளி திருட்டில் தொடர்புடையவர்கள் ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள் என்பது கேரள போலீஸôருக்கு தெரிய வந்தது. இதையடுத்து ஹரியாணா சென்ற கேரள காவல் துறையினர், உள்ளூர் காவல் துறையினர் உதவியுடன் 4 பேரைக் கைது செய்து காவலில் எடுத்தனர். மருத்துவரை மட்டும் திருவனந்தபுரத்துக்கு அழைத்து வந்து கேரள காவல்துறை விசாரணை நடத்தியதில் அவர் திட்டமிட்டு திருடாதது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உருளி திருடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற மருத்துவர் குடும்பத்தினருடன் பத்மநாப சுவாமி கோயிலுக்கு கடந்த வாரம் வந்துள்ளார். பாத்திரத்தின் முக்கியத்துவம் குறித்து அறியாமல் எடுத்துச் சென்றதாகவும் யாராவது ஆட்சேபம் தெரிவித்திருந்தால் அங்கேயே திருப்பி அளித்திருப்பேன் என்றும் காவல்துறை விசாரணையில் மருத்துவர் தெரிவித்தார். இதில் உண்மை இருப்பதாக கருதுவதால் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றப்பிரிவுகளைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இ... மேலும் பார்க்க

‘எய்ம்ஸ்’ தரத்தில் சமரசமில்லை: ஜெ.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி தரத்திலும் ஆசிரியா்களின் நியமனத்திலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படாது எனவும் அதன் தரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை ... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை: மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம்- மம்தா பானா்ஜி

மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்த... மேலும் பார்க்க

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடரும் இது போன்ற மிரட்டல்களால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட... மேலும் பார்க்க

தெரியுமா சேதி...?

மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கமல்நாத், சோனியா காந்தியால் திடீரென்று வரவழைக்கப்பட்டதும், அவருடன் சோனியா காந்தி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதும், விரைவில் கட்சியில் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: 16-ஆவது நாளாக மருத்துவா்கள் உண்ணாவிரத போராட்டம்- இன்று மம்தாவுடன் பேச்சு

போராட்டத்தை கைவிடுமாறு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்த நிலையில் அதை நிராகரித்து 16-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்த... மேலும் பார்க்க