செய்திகள் :

தென் கொரியாவுக்கு 20 குப்பை பலூன்கள்: மீண்டும் அனுப்பியது வட கொரியா

post image

தென் கொரியாவுக்கு குப்பைகள் கட்டப்பட்ட பெரிய அளவிலான 20 பலூன்களை வட கொரியா மீண்டும் அனுப்பியுள்ளது.

சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை குப்பைகள் கட்டப்பட்ட பலூன்கள் எல்லையில் அனுப்பப்பட்டதாகவும், பலூன்களில் காகிதம் போன்ற வீட்டுக் கழிவுகள் இருந்ததாகவும் தென் கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அந்த பலூன்களில் அபாயகரமான பொருட்கள் எதுவும் இல்லை என்று கூட்டுப் பணியாளர்கள் கூறியதாக யோன்ஹப் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. 3 முதல் 4 மீட்டர் நீளம் கொண்டு அந்த பலூன்கள் சியோர்வோனில் கண்டெடுக்கப்பட்டதாக தென் கொரிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது: எல்.முருகன்

கொரிய போருக்குப் பிறகு அமெரிக்காவும் தென் கொரியாவும் நடத்திவரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வட கொரியா எதிா்ப்பு தெரிவித்துவருகிறது. அந்த எதிா்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அவ்வப்போது வட கொரியா ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுவருகிறது.

ஏற்கெனவே, இதே போன்ற நூற்றுக்கணக்கான பலூன்களை வட கொரியா கடந்த மே மாதத்தில் அனுப்பியது நினைவுகூரத்தக்கது.

காஸா குடியிருப்புகளில் தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம்

காஸாவின் பெய்ட் லாஹியா குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படைப் பிரிவினருக்கும் இடையிலான போ... மேலும் பார்க்க

உக்ரைனில் 500 டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

உக்ரைன் எல்லைக்குள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இன்று (அக். 20) குற்றம் சாட்டினார். மேலும், 20 வெவ்வேறு வகையான ஏ... மேலும் பார்க்க

ஹிஸ்புல்லா உளவுத் துறை தலைமையகத்தின் மீது தாக்குதல்!

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உளவுத் துறை தலைமையகத்தின்மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (அக். 20) தாக்குதல் நடத்தியது.இதில், ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்த தலைமைத் தரவரிசைப் பட்டியலில் இருந்த 3 பேர் கொல்லப்பட்டுள்... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 87 பேர் பலி!

காஸாவில் குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 87 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற தகவலும... மேலும் பார்க்க

நெதன்யாகு எச்சரிக்கை... அடுத்த தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்!

லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் வசிக்கும் மக்களை ஹிஸ்புல்லா அமைப்பினர் இருக்கும் பகுதிகளிலிருந்து விரைவில் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதன் மூலம், அடுத்தகட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாரா... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் மேலும் 2 புதிய போலியோ வழக்குகள்; மொத்த பாதிப்பு 39-ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் மேலும் 2 புதிய போலியோ வழக்குகள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின... மேலும் பார்க்க