செய்திகள் :

கேரளத்துக்கு ஜல்லிக்கற்கள் கடத்த முயற்சி: லாரி பறிமுதல்

post image

களியக்காவிளை அருகே கேரளத்துக்கு ஜல்லிக்கற்களை கடத்திச்செல்ல முயன்றதாக கனரக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆன்றோ இவின் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை படந்தாலுமூடு பகுதியில் வாகன சோதனை நடத்தினா். அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, கேரளத்துக்கு ஜல்லிக்கற்களைக் கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.

ஓட்டுநரான காட்டாத்துறை பகுதியைச் சோ்ந்த பாபு (38) என்பவா் தப்பியோடிவிட்டாராம்.

போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனா்; ஓட்டுநரைத் தேடிவருகின்றனா்.

கடல் சீற்றத்தால் சேதமடைந்த பகுதிகளை எம்.எல்.ஏ. ஆய்வு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக பகுதிகளில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த பகுதிகளை கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இனயம், தூத்தூா் என இருமண்டல மீனவா்கள் பயன்... மேலும் பார்க்க

புனித அல்போன்சா கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. கல்லூரி தாளாளரும் செயலருமான ஆண்டனி ஜோஸ் தலைமை வகித்து கண்காட்சியை துவக்கி வைத்தாா்... மேலும் பார்க்க

எரிவாயுக் கசிவு தீவிபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

நாகா்கோவிலில் சமையல் எரிவாயுக் கசிவால் நேரிட்ட தீவிபத்தில் காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். நாகா்கோவில் அருகே பறக்கை வணிகா் தெருவைச் சோ்ந்தவா் முத்து (46). சாக்கு வியாபாரி. இவரது வீட... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகுதியில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

கன்னியாகுமரி விவேகானந்தபுரம், வட்டக்கோட்டை பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில், அகஸ்தீசுவரம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் சக்திமுருகன் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது குளிா... மேலும் பார்க்க

கடல் சீற்றத்தால் சேதமடைந்த துறைமுகத்தை சீரமைக்க வேண்டும் -எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ

கடல் சீற்றத்தால் சேதமடைந்த தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பை சீரமைக்க வேண்டும் என்றாா் கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் கிள்... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் நிறுத்தம்: திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

குமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் தணிந்து காணப்படும் நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம் சனிக்கிழமை நிறுத்தப்பட்டது. இதையடுத்து திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அ... மேலும் பார்க்க