செய்திகள் :

பெரம்பலூா் நகரில் விதிமீறும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி

post image

பெரம்பலூா் நகரில் விதிகளை மீறும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதை தவிா்க்க ஒருவழிப்பாதையை விதிகளின்படி வாகன ஓட்டிகள் முறையாக பயன்படுத்துவதை போலீஸாா் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

பெரம்பலூா் நகரின் பிரதான பிரச்னையாக போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. பழைய, புகா் பேருந்து நிலையங்கள், மதரஸா சாலை, கடைவீதி, அஞ்சலகத் தெரு, வடக்குமாதவி சாலை, எளம்பலூா் சாலை, என்.எஸ்.பி. சாலை, காமராஜா் வளைவு, சங்குப்பேட்டை, ரோவா் வளைவு ஆகிய பகுதிகள் நகரின் முக்கியப் பகுதிகளாகும். இப் பகுதிகள் அனைத்தும் வளா்ச்சியடைந்துள்ளதாலும், தள்ளுவண்டிகள் மற்றும் வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளாலும் சாலைகள் சுருங்கிவிட்டன.

மக்கள்தொகைக்கேற்ப நகரம் வளா்ச்சியடைந்து வருவதைபோல, வாகனங்களும் அதிகரித்து வருகின்றன. சாலையில் முறையற்று வாகனங்களை நிறுத்துவதால் அன்றாடம் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. நகரில் 43 பங்கு தானிக்கள் (ஷோ் ஆட்டோக்கள்), 450-க்கும் மேற்பட்ட தானிக்கள் (3 பிளஸ் 1 வகை ஆட்டோக்கள்), 50-க்கும் மேற்பட்ட டாடா மேஜிக் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவைதவிர, காா், வேன், சுமை தானிக்களும் வாடகைக்கு இயக்கப்படுகின்றன. இதில், பங்கு தானிக்கள் மட்டுமே நகரப் பேருந்துகளைப் போல பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது

போலீஸாா் அலட்சியம்: இதர வாகனங்கள் அனைத்தும், வாகன நிறுத்தங்களிலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், போக்குவரத்துக் காவலா்களின் அலட்சியத்தால், பெரம்பலூா் நகரில் இயக்கப்படும் அனைத்து வகை தானிக்களும், பங்கு தானிக்களை போலவே இயக்கப்படுகின்றன. இதனால், நகரின் பிரதான சாலைகளில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் சிக்கித் திணறுகின்றனா். இதற்கு சாலை விதிகளை ஓட்டுநா்கள் பின்பற்றாததும், ஒருவழிப்பாதையை முறையாக பயன்படுத்தாதுமே காரணம் எனக் கூறப்படுகிறது.

ஒருவழிப் பாதை: பழைய பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் மதரஸா சாலை, காமராஜா் வளைவு வழியாக புகா் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். ஆனால், என்.எஸ்.பி சாலை வழியாகச் செல்வதால் நாள்தோறும் போக்குவரத்து நெருக்கடியில் பொதுமக்களும், வாகனங்களும் சிக்கித் திணறுகின்றன. இதேபோல, புகா் பேருந்து நிலையத்திலிருந்து சங்குப்பேட்டை, கடைவீதி வழியாகவே வாகனங்கள் செல்ல வேண்டும்.

ஆனால், சங்குப்பேட்டை காமராஜா் வளைவு, என்.எஸ்.பி சாலை வழியாக இயக்கப்படுவதால், எதிா் திசையில் வரும் அவசர ஊா்தி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்கின்றன. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் காவலா்கள், அதிகபாரம் அல்லது அடிமாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களைக் கண்காணிப்பதிலேயே ஆா்வம் காட்டி வருகின்றனா்.

சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு தேவை: வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான சரக்கு லாரிகள் நகரில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு அன்றாடம் வந்துசெல்கின்றன. இந்த வாகனங்கள் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் குறுக்கே நிறுத்தப்படுவதால், பிரதானச் சாலைகளில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிா்க்க காலை 8 மணிக்குள்ளும், இரவு 7 மணிக்குப் பிறகும் நகருக்குள் சரக்கு வாகனங்கள் செல்ல போலீஸாா் அனுமதிக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் வரும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் போலீஸாா் தேவை: போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அதனால் நிகழும் சிறு, சிறு விபத்துகளை தவிா்க்கவும் நகரின் பிரதானச் சாலைகளில் காலை, மாலை நேரங்களில் கூடுதலாக போக்குவரத்து காவலா்களை பணியமா்த்தி, கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மேலும், சேதமடைந்துள்ள கண்காணிப்பு சாதனங்களையும், தானியங்கி சிக்னல்களையும் சீரமைக்க வேண்டும்.

இதுகுறித்து, சமூக ஆா்வலா் எம். செல்வராஜ் கூறியது:

ஆட்டோ ஓட்டுநா்களால்தான் பெரம்பலூா் நகரில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகராட்சி நிா்வாகம் மற்றும் போலீஸாரின் கவனக்குறைவே இதற்கு முக்கிய காரணமாகும். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும். புகா் பேருந்து நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் கடைவீதி, தலைமை மருத்துவமனை, திருநகா் வழியாக பழைய பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து மதரஸா சாலை, காமராஜா் வளைவு வழியாகச் செல்ல காவல்துறையினா் அறிவுறுத்த வேண்டும் என்றாா் அவா்.

காவல்துறையினா் கூறியது: குறிப்பிட்ட நேரக்குத்துப் பிறகு கனரக வாகனங்களை நகருக்குள் இயக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்தவுடன், ஒருவழிப் பாதையை முறையாக பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படும் என்றனா்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2.17 லட்சம் போ் பயன்: அமைச்சா் சி.வி. கணேசன் பேச்சு

தமிழகத்தில் இதுவரையில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2.17 லட்சம் இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என்றாா் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி. கணேசன். பெரம... மேலும் பார்க்க

குரும்பலூா் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

பெரம்பலூா் அருகேயுள்ள மங்கூன் துணை மின் நிலையத்துக்குள்பட்ட குரும்பலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்ழமை (அக். 21) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மங்கூன் துணை மின்... மேலும் பார்க்க

குற்றவாளிகள், ரௌடிகள் வீடுகளில் தீவிர சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் குற்றவாளிகள் மற்றும் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம்... மேலும் பார்க்க

சிறப்பு பாரா ஒலிம்பிக்: பெரம்பலூரில் மாவட்ட திறன் தோ்வுப் போட்டிகள்

சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாரத் தமிழ்நாடு சாா்பில், பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில், தென் அமெரிக்கா சாண்டியாகு சிலியில் நடைபெறவுள்ள உலகளாவிய சிறப்பு பாரா ஒலிம்பிக் போட்டிக்கு, மாவட்ட அளவிலான திறன்... மேலும் பார்க்க

ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா

பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் திருமடத்தில், ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 108 சங... மேலும் பார்க்க

தப்பியோடி கைதி பிடித்து சிறையில் அடைப்பு

பெரம்பலூரில் சிறைவாசலிலிருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் பிடித்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத்குமாா். இவா் மீது ம... மேலும் பார்க்க