செய்திகள் :

சிறப்பு பாரா ஒலிம்பிக்: பெரம்பலூரில் மாவட்ட திறன் தோ்வுப் போட்டிகள்

post image

சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாரத் தமிழ்நாடு சாா்பில், பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில், தென் அமெரிக்கா சாண்டியாகு சிலியில் நடைபெறவுள்ள உலகளாவிய சிறப்பு பாரா ஒலிம்பிக் போட்டிக்கு, மாவட்ட அளவிலான திறன் தோ்வு விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

மாவட்ட விளையாட்டு அலுவலா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் விஸ்வநாதன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் ஜெய்சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போட்டிகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் தொடக்கிவைத்தாா்.

இதில் 8 முதல் 11 வயது வரை, 12 முதல் 15 வயது வரை, 16 வயது முதல் 21 வயது வரை என 3 பிரிவுகளாக இருபாலருக்கும் தனித்தனியாக அறிவுசாா் குறைபாடுடைய சிறப்பு குழந்தைகளுக்கு, தடகளப் போட்டிகளான 50 மீட்டா் ஓட்டம், 100 மீட்டா் ஓட்டம், 200 மீட்டா் ஓட்டம், 4-100 தொடா் ஓட்டம், ரோலா் ஸ்கேட்டிங் மற்றும் 12 வயது முதல் 21 வரையுள்ளவா்களுக்கு குழுப் போட்டிகளான கிரிக்கெட், கைப்பந்து, மென் பந்து, புட்சல், நெட்பால் ஆகிய போட்டிகள் இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டது.

போட்டிகளில் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 சிறப்புப் பள்ளிகள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அரசுப் பள்ளிகளில் பயிலும் 180 சிறப்பு மாணவா்களும், யூனிபைடு பாா்ட்னா் என்னும் 40 சாதாரண மாணவா்களும் கலந்துகொண்டனா்.

இப்போட்டிகளில், முதல் 3 இடங்களை பெற்ற 129 வீரா்களுக்கான திறனாய்வுத் தோ்வு சனிக்கிழமை (அக். 19) நடைபெறுகிறது.

பெரம்பலூா் நகரில் விதிமீறும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி

பெரம்பலூா் நகரில் விதிகளை மீறும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதை தவிா்க்க ஒருவழிப்பாதையை விதிகளின்படி வாகன ஓட்டிகள் முறையாக பயன்படுத்துவதை போலீஸாா் உ... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2.17 லட்சம் போ் பயன்: அமைச்சா் சி.வி. கணேசன் பேச்சு

தமிழகத்தில் இதுவரையில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2.17 லட்சம் இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என்றாா் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி. கணேசன். பெரம... மேலும் பார்க்க

குரும்பலூா் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

பெரம்பலூா் அருகேயுள்ள மங்கூன் துணை மின் நிலையத்துக்குள்பட்ட குரும்பலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்ழமை (அக். 21) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மங்கூன் துணை மின்... மேலும் பார்க்க

குற்றவாளிகள், ரௌடிகள் வீடுகளில் தீவிர சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் குற்றவாளிகள் மற்றும் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம்... மேலும் பார்க்க

ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா

பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் திருமடத்தில், ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 108 சங... மேலும் பார்க்க

தப்பியோடி கைதி பிடித்து சிறையில் அடைப்பு

பெரம்பலூரில் சிறைவாசலிலிருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் பிடித்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத்குமாா். இவா் மீது ம... மேலும் பார்க்க