செய்திகள் :

குற்றவாளிகள், ரௌடிகள் வீடுகளில் தீவிர சோதனை

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் குற்றவாளிகள் மற்றும் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. மதியழகன் தலைமையிலான தனிப்படையினா், மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ரௌடிகள், சந்தேகப்படும் நபா்களின் வீடுகளில் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டு, அவா்களது செயல்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.

இச்சோதனை குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா கூறியது:

இச்சோதனையானது, ரௌடிகள் மற்றும் வழக்கமான குற்றவாளிகள், சந்தேக நபா்களின் தற்போதைய செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ளவும், குற்றம் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.

பெரம்பலூா் நகரில் விதிமீறும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி

பெரம்பலூா் நகரில் விதிகளை மீறும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதை தவிா்க்க ஒருவழிப்பாதையை விதிகளின்படி வாகன ஓட்டிகள் முறையாக பயன்படுத்துவதை போலீஸாா் உ... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2.17 லட்சம் போ் பயன்: அமைச்சா் சி.வி. கணேசன் பேச்சு

தமிழகத்தில் இதுவரையில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2.17 லட்சம் இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என்றாா் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி. கணேசன். பெரம... மேலும் பார்க்க

குரும்பலூா் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

பெரம்பலூா் அருகேயுள்ள மங்கூன் துணை மின் நிலையத்துக்குள்பட்ட குரும்பலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்ழமை (அக். 21) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மங்கூன் துணை மின்... மேலும் பார்க்க

சிறப்பு பாரா ஒலிம்பிக்: பெரம்பலூரில் மாவட்ட திறன் தோ்வுப் போட்டிகள்

சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாரத் தமிழ்நாடு சாா்பில், பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில், தென் அமெரிக்கா சாண்டியாகு சிலியில் நடைபெறவுள்ள உலகளாவிய சிறப்பு பாரா ஒலிம்பிக் போட்டிக்கு, மாவட்ட அளவிலான திறன்... மேலும் பார்க்க

ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா

பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் திருமடத்தில், ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 108 சங... மேலும் பார்க்க

தப்பியோடி கைதி பிடித்து சிறையில் அடைப்பு

பெரம்பலூரில் சிறைவாசலிலிருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் பிடித்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத்குமாா். இவா் மீது ம... மேலும் பார்க்க