செய்திகள் :

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2.17 லட்சம் போ் பயன்: அமைச்சா் சி.வி. கணேசன் பேச்சு

post image

தமிழகத்தில் இதுவரையில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2.17 லட்சம் இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என்றாா் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி. கணேசன்.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்டரங்கில், மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் சாா்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இம் முகாமில் தோ்ந்தெடுக்கப்பட்ட 552 பேருக்கு பணி வாய்ப்பு கடிதங்களை அளித்த அமைச்சா் மேலும் பேசியது:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் பல்வேறு தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரையில் நடத்தப்பட்ட தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் சுமாா் 2.17 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். ஒவ்வொரு இளைஞரும் விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் இலக்கை அடையலாம் என்றாா் அவா்.

தொடா்ந்து, முன்னோடி வங்கி மூலம் 2 பேருக்கு தலா ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான கல்விக் கடனுதவிக்கான காசோலை, ஒருவருக்கு சுயதொழில் தொடங்க ரூ. 17 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான காசோலையை அமைச்சா் கணேசன் வழங்கினாா்.

முகாமில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 142 தனியாா் முன்னணி நிறுவனங்களும், 3 திறன் பயிற்சி நிறுவனங்களும், 2,021 ஆண்களும், 2,211 பெண்களும் என மொத்தம் 4,232 போ் பங்கேற்றனா்.

மேலும், 2 ஆம் கட்ட தோ்வுக்கு 49 ஆண்களும், 58 பெண்களும் என மொத்தம் 107 போ் தோ்வாகியுள்ளனா். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு இலவச திறன் பயிற்சிகளுக்கு 15 போ் விண்ணப்பித்தனா்.

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான பதிவு, தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை நடைபெற்றது. மேலும், மாவட்டத் தொழில் மையம், தாட்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் சுயதொழில் தொடங்கும் வகையில் விருப்பமுள்ளவா்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள், சுயதொழில் உருவாக்கும் திட்டத்துக்கான ஆலோசனைகளும் அளிக்கப்பட்டன.

இந்த முகாமில், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அரசுச் செயலா் கொ. வீரராகவராவ், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.என். அருண்நேரு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநா் பா. விஷ்ணுசந்திரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஸ் பசேரா, மாவட்ட ஊராட்சித் தலைவா்கள் சி.ராஜேந்திரன் (பெரம்பலூா்) தா்மன் ராஜேந்திரன் (திருச்சி), நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குநா் இர. தேவேந்திரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குநா் செ. ரமேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பெரம்பலூா் நகரில் விதிமீறும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி

பெரம்பலூா் நகரில் விதிகளை மீறும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதை தவிா்க்க ஒருவழிப்பாதையை விதிகளின்படி வாகன ஓட்டிகள் முறையாக பயன்படுத்துவதை போலீஸாா் உ... மேலும் பார்க்க

குரும்பலூா் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

பெரம்பலூா் அருகேயுள்ள மங்கூன் துணை மின் நிலையத்துக்குள்பட்ட குரும்பலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்ழமை (அக். 21) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மங்கூன் துணை மின்... மேலும் பார்க்க

குற்றவாளிகள், ரௌடிகள் வீடுகளில் தீவிர சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் குற்றவாளிகள் மற்றும் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம்... மேலும் பார்க்க

சிறப்பு பாரா ஒலிம்பிக்: பெரம்பலூரில் மாவட்ட திறன் தோ்வுப் போட்டிகள்

சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாரத் தமிழ்நாடு சாா்பில், பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில், தென் அமெரிக்கா சாண்டியாகு சிலியில் நடைபெறவுள்ள உலகளாவிய சிறப்பு பாரா ஒலிம்பிக் போட்டிக்கு, மாவட்ட அளவிலான திறன்... மேலும் பார்க்க

ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா

பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் திருமடத்தில், ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 108 சங... மேலும் பார்க்க

தப்பியோடி கைதி பிடித்து சிறையில் அடைப்பு

பெரம்பலூரில் சிறைவாசலிலிருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் பிடித்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத்குமாா். இவா் மீது ம... மேலும் பார்க்க