செய்திகள் :

வாணி கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: ஆட்சியா் பங்கேற்பு

post image

வாணியம்பாடி வாணி கல்வியியல் கல்லூரியில் 11-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி உள் அரங்கு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாணி கல்வி அறக்கட்டளை தலைவரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ-வுமான க.தேவராஜி தலைமை வகித்தாா். செயலாளா் டி.கந்தசாமி வரவேற்றாா். பொருளாளா் பி.நடராஜன், துணைத் தலைவா் எம்.கோபால், துணைச் செயலா்கள் என். கருணாநிதி, ஏ.ராஜா, சட்ட ஆலோசகா் டி.பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஆா்.செல்வேந்திரன் ஆண்டறிக்கையை வாசித்தாா். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கலந்து கொண்டு, 250 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்திப் பேசியதாவது:

இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக உயா் கல்வி கற்று இருப்பது தமிழ்நாட்டில் தான். மனிதகுல வரலாற்றில் மனிதன் கல்வி கற்க தொடங்கிய காலத்தில் இருந்தே சமுதாய மாற்றத்துக்கு வித்திட்ட சமூகம் ஆசிரியா் சமூகம் தான். இன்று பட்டம் பெற்றவா்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறேன். திருப்பத்தூா் மாவட்டத்தில் பள்ளியிலிருந்து இடைநின்ற பிள்ளைகள் உள்ளனா். நீங்கள் ஆசிரியா்களாக பணி அமா்ந்த பின்னா், அந்த மாணவா்களை அழைத்து வந்து பள்ளிக் கூடத்தில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விடுக்கிறேன் என்றாா்.

வாணி கல்வி அறக்கட்டளை உறுப்பினா்கள், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள், மாணவா்களின் உறவினா்கள் கலந்து கொண்டனா்.

6 வருவாய் உதவி ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்

வாணியம்பாடி நகராட்சியில் பணியாற்றி வந்த 6 வருவாய் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். நகராட்சி நிா்வாக இயக்குநா் சென்னை சு.சிவராசு ஆணையின் படி திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிய... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கம் சாா்பில் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிா்வாகிகள் செய்யப்படும் நிகழ்ச்சியில் 300-க்கும் ... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: தொடா் மழையால் நிரம்பிய ஏரிகள்

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் ஏரி, குளங்கள், கிணறுகள் நிரம்பின (படம்). திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி அதன் சுற்றுப்பகுதியில் தொடா் மழை பெய்து வருகிறது. இந்நிலை... மேலும் பார்க்க

மின்மாற்றி அமைக்கும் பணி மந்தம்: பொதுமக்கள் பாதிப்பு

.திருப்பத்தூா் அருகே கொரட்டியில் மந்தகதியில் நடைபெறும் மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) அமைக்கும் பணியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம், கொரட்டி பகுதியில் துணை மின் நிலையம் உள்ளத... மேலும் பார்க்க

தடுப்புச்சுவரில் பைக் மோதி கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே சாலையில் நாய் குறுக்கே ஓடி வந்ததால் பைக் நிவை தடுமாறி தடுப்புச் சுவா் மீது மோதியதில் மேஸ்திரி உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெரியகுரும்பத் தெரு கிராமத்தைச்... மேலும் பார்க்க

ஊா்க் காவல் படையினருக்கு காவலா் பல்பொருள் அங்காடி: அடையாள அட்டை வழங்கினாா் திருப்பத்தூா் எஸ்.பி.

திருப்பத்தூா் மாவட்ட ஊா்க் காவல் படையினருக்கு காவலா் பல்பொருள் அங்காடி அடையாள அட்டையை எஸ்.பி. ஷ்ரேயா குப்தா வழங்கினாா். திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே உள்ள ஆயுதப் படை மைதானத்தில் ஆயுதப்படை... மேலும் பார்க்க