செய்திகள் :

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

post image

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவம்பர் 20 அன்று நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 99 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் வந்தேரா தெற்கு தொகுதியில் மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் செலார், கான்காவ்லி தொகுதியில் பாஜக மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினரான நாராயண ராணேவின் மகன் நிதின் ராணே போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே கம்தி தொகுதியிலும், முன்னாள் தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கொத்ரூட் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் அஷோக் சவானின் மகள் ஸ்ரீஜெயா சவான் போகார் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இதையும் படிக்க | வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

இந்தத் தேர்தலில் பாஜக மொத்தமாக 150 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளது. எனவே, மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியுடனும் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான என்சிபி கட்சியுடனும் பாஜக கடுமையான தொகுதி பேரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: மருத்துவர் உள்பட 6 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். அதில் மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 200 பேருக்கு உடல்நலக் குறைவு

துக்க நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட சிற்றுண்டியை சாப்பிட்டதால் 200 பேருக்கு ஒவ்வாமை உண்டாகி உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பஸ்கோரியா கிராமத்தில் துக்க நிகழ்ச... மேலும் பார்க்க

ராஜஸ்தான் கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் பலி: மோடி இரங்கல்

ஜெய்பூா்: ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்தி மோடி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 ல... மேலும் பார்க்க

லடாக் ஆதரவாளர்கள் 15 நாள்களாக உண்ணாவிரதம்: பிரதமரை சந்திக்க கோரிக்கை!

புதுதில்லியில் 15 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பருவநிலை விஞ்ஞானி சோனம் வாங்க்சக் மத்திய அரசின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.லடாக் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்களின் ம... மேலும் பார்க்க

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

தனது மனைவி நலமுடன் வாழ வேண்டுமென்பதற்காக உண்ணா நோன்பிருந்து விரதத்தை கடைப்பிடித்து வருகிறார் பாஜக எம்.பி. ஒருவர்.கணவர் ஆரோக்கியமாக நெடுநாள் வாழ வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் இல்லத்தரசிகள் கடைப்பிடிக்கு... மேலும் பார்க்க

வயநாடு தொகுதியை இரண்டாம் வாய்ப்பாகவே கருதுகிறது ராகுல் குடும்பம்: நவ்யா ஹரிதாஸ்

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைத் தொகுதியை இரண்டாம் வாய்ப்பாகவே மட்டுமே ராகுல் காந்தி குடும்பம் கருதுவதாகவும், இதனை அந்த தொகுதி மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக பாஜக வேட்பாளா் நவ்யா ஹரிதாஸ் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க