செய்திகள் :

ரயில்வே காலி பணியிடங்களை நிரப்ப 10 ஆண்டுகள் போதவில்லையா? ப. சிதம்பரம் கேள்வி!

post image

ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு சரிவர முயற்சிகள் எடுக்காதது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, ரயில்வே துறையில் பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளதாக அரசு ஒப்புக் கொண்டுள்ளது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அரசிதழில் அல்லாத பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 14,63,286 பணியிடங்களில் 2,61,233 பணியிடங்கள் காலியாக உள்ளதாக ரயில்வே ஒப்புக் கொண்டுள்ளது.

இது மொத்தத்தில் 17. 85 சதவீதம் அல்லது 6 -ல் ஒன்று மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | நாடாளுமன்ற மேற்பாா்வையில் உளவு அமைப்புகள் செயல்பட சட்டம்: காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி வலியுறுத்தல்

எதற்காக அந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனை நிரப்ப 10 ஆண்டுகள் முழுவதும் போதவில்லையா?

ஒரு பக்கம் பெரிய வேலைவாய்ப்பின்மை உருவாகியுள்ளது. மற்றொரு பக்கம் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் சரியான கண்காணிப்பின்றி ரயில் விபத்துகள் நடைபெற்று வருகின்றன.

’குறைவான அரசு, நிறைவான ஆட்சி’ என்பதன் பொருள் இதுதானா? இது வெறுமனே மோசமான மற்றும் திறமையற்ற நிர்வாகமாகும்” என்று விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு ரூ.100 அனுப்பிய பழங்குடிப் பெண்! ஏன் தெரியுமா?

ஒடிஸாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.100 அனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநில பாஜக துணைத் தலைவரிடம் அவர் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவம்பர் 20 அன்று நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் களம் சூ... மேலும் பார்க்க

நினைவேந்தல் நிகழ்வில் உணவு உண்ட 200 பேருக்கு உடல் பாதிப்பு!

அஸ்ஸாம் மாநிலத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றில் உணவு உண்ட 200 பேருக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மாவட்டத்தில் பிரதீவ்ப் கோகய் என்பவரின் தாயாருக்கு நினைவேந்தல் நடைபெற்றுள... மேலும் பார்க்க

இந்தூருக்கு விரைவில் முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் டபுள் டெக்கர் பேருந்து சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதன் மேயர் புஷ்யமித்ர பார்கவா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 60 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்... மேலும் பார்க்க

சல்மான் கான் என்ன செய்தார்? கொலை மிரட்டல் ஏன்? விரிவாக!!

பாலிவுட்டில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம்வரும் சல்மான் கான் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை முயற்சியில் இருந்து காப்பதற்கு பல்வேறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சல்மான் கானும் காவல்துறையின... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலி

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தௌல்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு பேருந்து சனிக்கிழமை இரவு 11 மணியள... மேலும் பார்க்க