செய்திகள் :

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும்: உதயநிதிக்கு தமிழிசை பதில்

post image

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும் என துணை முதல்வர் உதயநிதிக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் கிரிவலம் போக வில்லை, சரி வலம் தான் போனதாக பதிவிட்டு உள்ளார். இடம் போய் கொண்டு இருந்தவர்கள் வலம் போக ஆரம்பித்து இருக்கிறீர்கள். இதுவே ஆன்மிகத்தின் மிகப்பெரிய வெற்றி தான்.

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று கூறி உள்ளார். தேர்தல் ஜனநாயகத்தில் யாரும் நிராகரிப்பட்டவர்கள் கிடையாது. 3 லட்சம் பேர் ஒட்டு போட்டு அங்கீகரித்து உள்ளார்கள். ஆன்மிகமும் அரசியலும் தமிழகத்தில் கலக்கவே கலக்காது என்கிறார் உதயநிதி. சவால் விடுகிறேன் தமிழகத்தில் ஆன்மிகமும் அரசியலும் கலக்கத் தான் செய்யும்.

பிரதமர் மோடிக்கு ரூ.100 அனுப்பிய பழங்குடிப் பெண்! ஏன் தெரியுமா?

அண்ணா வளர்த்த்து தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்தது தமிழ். பெரியார் வளர்த்தது தமிழ் அல்ல. பெரியாழ்வார் வளர்த்தது தமிழ். 2026ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி முழுமையாக இருக்காது. திருமாவளவன் ஆட்சியில் பங்கு கேட்கிறார். உதயநிதியை தயார் செய்வதால் சமூக நிதி அங்கு இல்லை. பிறகு திருமாவளவனுக்கு அங்கீகாரம் எங்கே கிடைக்கும்.

அரசியலும் ஆன்மிகமும் என்றும் கலக்காது: துணை முதல்வர் உதயநிதி

கம்யூனிஸ்டு கட்சியினர், சாம்சங் தொழிலாளர்களுக்காக போராட்டம் நடத்தியது. ஆட்சியை எதிர்த்து பாட ஆரம்பித்து விட்டார்கள். கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி திமுக கட்சியிலேயே பிரச்னைகள் இருக்கின்றன. 2026ம் ஆண்டு தேர்தல் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 29 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 29 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகைக்கு புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது: எல்.முருகன்

சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே பாஜக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் பிரிவு சார்பாக ஆட்டோ ஓட்டுநர்கள்... மேலும் பார்க்க

இரு தனியார் பேருந்துகள் மோதல்! 50 பயணிகள் உயிர் தப்பினர்!

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், நல்வாய்ப்பாக பயணிகள் உயிர் தப்பினர்.சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (அக். 20) காலை, வாழப்பாட... மேலும் பார்க்க

பாா்வையற்றோருக்கு நூல் கட்டுநா் பயிற்சியை நிறுத்தும் அரசாணை வாபஸ்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசினா் தொழிற்பயிற்சி மையத்தில் ஆண்டுதோறும் 21 பாா்வையற்றோருக்கு வழங்கப்படும் நூல் கட்டுநா் பயிற்சியை நிறுத்தும் அரசாணை திரும்பப் பெறப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க

தேனி ஆவினில் தீபாவளி இனிப்புகள் தயாரிக்கப்படுவதில்லை: அரசு விளக்கம்

தேனி ஆவினில் தீபாவளி இனிப்புகள் தயாரிக்கப்படுவதில்லை என்று தமிழக அரசின் சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: உணவு பாதுகாப்பு மற்றும் தர... மேலும் பார்க்க