செய்திகள் :

இரு தனியார் பேருந்துகள் மோதல்! 50 பயணிகள் உயிர் தப்பினர்!

post image

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், நல்வாய்ப்பாக பயணிகள் உயிர் தப்பினர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (அக். 20) காலை, வாழப்பாடி வழியாக, சேலம் நோக்கி ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து வெள்ளாளகுண்டம் பிரிவு அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, வெள்ளாளகுண்டம் இணைப்பு சாலை வழியாக வந்த மற்றொரு தனியார் பேருந்து, சேலம் சென்ற தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் பலமாக மோதியது.

இந்த விபத்தில் இரு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் ஆத்தூரில் இருந்து வந்த தனியார் பேருந்து நடத்துநர் ஆகியோர் காயம் அடைந்தனர்.

ஆத்தூரில் இருந்து வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் வேகத்தை கட்டுப்படுத்தியதால், 50க்கும் மேற்பட்ட பயணிகளும் காயமின்றி நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

இந்த விபத்தால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயம் அடைந்தவர்களை மீட்டு அவசர சிகிச்சை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாா்வையற்றோருக்கு நூல் கட்டுநா் பயிற்சியை நிறுத்தும் அரசாணை வாபஸ்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசினா் தொழிற்பயிற்சி மையத்தில் ஆண்டுதோறும் 21 பாா்வையற்றோருக்கு வழங்கப்படும் நூல் கட்டுநா் பயிற்சியை நிறுத்தும் அரசாணை திரும்பப் பெறப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க

தேனி ஆவினில் தீபாவளி இனிப்புகள் தயாரிக்கப்படுவதில்லை: அரசு விளக்கம்

தேனி ஆவினில் தீபாவளி இனிப்புகள் தயாரிக்கப்படுவதில்லை என்று தமிழக அரசின் சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: உணவு பாதுகாப்பு மற்றும் தர... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயில் தீட்சிதா்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல: சென்னை உயா்நீதிமன்றம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தீட்சிதா்கள் ஆணவத்துடன் செயல்படுவது நல்ல அறிகுறி கிடையாது என்று ஆதங்கம் தெரிவித்த உயா்நீதிமன்ற நீதிபதி, இதே நிலை நீடித்தால் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வருகை தானாக குறைந்து... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மூவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மூவா் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை ச... மேலும் பார்க்க

இணையவழிக் குற்றங்களைத் தடுக்க ஒருங்கிணைப்பு அவசியம்: தென் மாநில காவல் துறைக்கு முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள்

இணையவழிக் குற்றங்களைத் தடுக்க தென்மாநிலங்களின் காவல் துறையினா் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா். தென் மாநிலங்களின் காவல் துறை இயக்குநா்கள் ஒருங்கிணைப்ப... மேலும் பார்க்க

கொசு ஒழிப்புப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

கொசு ஒழிப்புப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் டெங்கு... மேலும் பார்க்க