செய்திகள் :

`ஒரு மொழியை படி, படிக்காதே எனச் சொல்ல இங்கு யாருக்கும் உரிமை இல்லை!' - விஜய பிரபாகரன் கூறுவதென்ன?

post image
``எந்த மொழியும் குறைவானது அல்ல, அவரவருக்கு அவரவர் மொழி பெரியது, நாம் அனைத்து மொழியையும் கற்றறிய வேண்டும்" என தே.மு.தி.க விஜய பிரபாகரன் கூறியிருக்கிறார்.

தே.மு.தி.க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விஜய பிரபாகரன், "ஆளுநர் ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட திருநாடு என்ற வார்த்தை விடப்பட்டது தவறானது எனினும், அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்ட பின்னரும், தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அரசியல் செய்து வருகின்றன. ஒரு பக்கம் இந்தி படி என ஒரு கட்சி கூறுகிறது, மற்றொரு பக்கம் படிக்காதே என வேறொரு கட்சி கூறுகிறது.

ஸ்டாலின் - ஆளுநர் ரவி

தமிழ் மொழியை 100 % கற்றுக்கொண்டு, உள்ளூரில் வேலை கிடைக்காமல் வெளியூர் செல்லும் நபர்கள் என்ன செய்வது? அவர்கள் ஆந்திரா, பெங்களூர், மும்பை போன்ற இடங்களுக்குச் சென்றால், அந்த உள்ளூர் மொழியை கற்றுத்தான் ஆக வேண்டும். ஒரு மொழியை படிக்காதே என சொல்லவும், கட்டாயம் நீ இதைத்தான் படிக்க வேண்டும் எனச் சொல்வும் இங்கு யாருக்கும் உரிமை என்பது இல்லை. இந்த உலகில் வானுக்கு எல்லை இல்லை என்பதைப்போல, நமது அறிவுக்கும், கற்றல் தேடலுக்கும் எல்லை இல்லை. பல விஷயங்களையும், மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்" எனக் கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`மாவட்டத் தலைவர்கள் மாற்றம்?' - சத்தியமூர்த்தி பவனில் `புது' சலசலப்பு!

சொதப்பலில் முடிந்த நிர்வாகிகள் சந்திப்பு, பிசுபிசுத்துப் போன நடைப்பயணம் என தமிழக காங்கிரஸில் ஏற்கெனவே ஏகப்பட்ட சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில், 'தனது ஆதரவாளர்களை மாவட்ட தலைவர்களாக்க துடித்து வருகிறார்,... மேலும் பார்க்க

Train Accident : கவரப்பேட்டை ரயில் விபத்து ஒரு சதியா? - வெளியான `ஷாக்' தகவல்

திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே கடந்த 11-ம் தேதி கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து தர்பங்காவிற்கு செல்ல இருந்த ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில் விபத்திற்குள்ளாகி இருந்தது.லூப் லைனில் நின்று கொண்டிருந்... மேலும் பார்க்க

Vijay: "வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று..." - தவெக தலைவரின் இரண்டாவது கடிதம்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்களுக்கான இரண்டாவது கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்.நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் ... மேலும் பார்க்க

India - Canada : மோசமடையும் இந்தியா - கனடா உறவு... இந்த விவகாரத்தில் லாரன்ஸ் பெயர் அடிபடுவது ஏன்?

லாரன்ஸ் பிஷ்னோய் என்றால் இன்றைக்கு பாலிவுட்டில் ஒரு அச்சம் ஏற்படும் அளவுக்கு நிலைமை உருவாகி இருக்கிறது. பஞ்சாப்பில் பாடகர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளால் அச்சத்தில் வாழ்கின்றனர். இப்போது அதே நிலையை... மேலும் பார்க்க

"திமுக-விற்கு சமூகநீதி குறித்து பேசவோ, தொழிலாளர் உரிமை குறித்து முழங்கவோ உரிமை இல்லை!" - ராமதாஸ்

கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்குவதுடன், பத்தாண்டுகளை நிறைவு செய்த தற்காலிக தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி அற... மேலும் பார்க்க

Israel : `ஹெஸ்பொல்லா, மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டது' - ட்ரோன் தாக்குதலுக்கு நெதன்யாகு எச்சரிக்கை

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டில் ட்ரோன் தாக்குதல் முயற்சி நடந்ததாக செய்திகள் வெளியான நிலையில், ஹெஸ்பொல்லா 'மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டது' என்று எச்சரித்துள்ளார் நெதன்யாகு.சனிக்கிழமை தொடங்கி தெற்க... மேலும் பார்க்க