செய்திகள் :

Lawrence Bishnoi: 700 துப்பாக்கிச்சூடு கொலையாளிகள்; சிறைக்குள்ளிருந்தபடியே கட்டுப்படுத்தும் லாரன்ஸ்!

post image

அரசியல் தலைவர் பாபா சித்திக் கொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள பாந்த்ரா கிழக்கு பகுதியில் அவரைச் சுட்டு வீழ்த்திய நபர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குஜராத் சபர்மதி சிறையில் இருக்கும் அந்தக் கும்பலின் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

லாரன்ஸ் பிஷ்னோய்

பிஷ்னோய் கேங்

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, இமாச்சல பிரதேசம் ஆகிய இந்திய மாநிலங்கள் மட்டுமன்றி கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் செயல்படுகிறது பிஷ்னோய் கேங்.

கோல்டி பிரார் என்று அழைக்கப்படும் சதீந்தர்ஜீத் சிங், கனடாவில் இருந்து பிஷ்னோய் கும்பலின் சர்வதேச செயல்பாடுகளை கவனிக்கும் பெரும்புள்ளி.

பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து மிரட்டி பணம் பறித்தல், கொலை செய்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக உயர் அந்தஸ்தில் இருப்பவர்களை கொலை செய்வதில் பெயர்பெற்றிருக்கிறது. பஞ்சாபி பாடகர்கள் உட்பட சில பிரபலங்களும் இந்த கும்பலால் குறி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

கொலைக் குற்றம்

லாரன்ஸ் பிஷ்னோய்

பஞ்சாப் மாநிலம், அபோஹருக்கு அருகில் உள்ள தட்டரன்வாலி கிராமத்தில் பிறந்தவர் லாரன்ஸ் பிஷ்னோய். இவரது தந்தை ஒரு காவல்துறை கான்ஸ்டபிள்.

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது கோல்டி பிராரைச் சந்தித்தார் லாரன்ஸ். இந்தச் சந்திப்புதான் அவர் நிழல் உலகில் அடியெடுத்து வைக்க அடித்தளமாக அமைந்தது. கோல்டியும் லாரன்ஸும் பின்னாட்களில் நெருங்கிய கூட்டாளி ஆகினர்.

லாரன்ஸ் சிறையில் இருந்தாலும் கும்பலின் அட்டூழியங்கள், குற்றச்செயல்கள் எவ்வித தங்குதடையும் இன்றி அரங்கேறி வருகின்றன.

சிறையில் இருந்தே குற்றங்களைத் திட்டமிடவும் செயல்படுத்தவும் லாரன்ஸ் பிஷ்னோயால் சாத்தியப்படுவது பலதரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

பிஷ்னோய் இன மக்கள் குறித்து தெரிந்துகொள்ள...

லாரன்ஸ் பிஷ்னோய்

சிறைக்குள் ராஜ்ஜியம்?

லாரன்ஸ், இருப்பிடத்தை மறைக்க உயர்தர விபிஎன் பொருத்தப்பட்ட மொபைல்களை சிறைக்குள் கடத்தி பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. சிறைக்குள்ளிருந்து அவர் தினமும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள கூட்டாளிகளுடன் தொடர்புகொள்கிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிநவீன உபகரணங்கள் மூலம் யாருக்கும் தெரியாமல் டெலிகிராம் வழியாக தங்கள் கும்பலை பிஷ்னோய் கும்பலின் முக்கிய புள்ளிகள் கட்டுப்படுத்துகின்றனர்.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், பல உள்ளூர் கும்பல்களுடன் தொடர்பு வைத்திருக்கிறது. இதன் மூலம் குறைந்த வயது வாலிபர்கள் பலரை கொலையாளிகளாக பயன்படுத்துகிறது என என்.டி.டி.வி செய்திகள் தெரிவிக்கிறது. இந்த கும்பல் கிட்டத்தட்ட 700 துப்பாக்கிச்சுடு கொலையாளிகளை கைக்குள் வைத்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

பிஷ்னோய் கும்பல் விவரமான திட்டங்கள் தீட்டிக் கொலை செய்வதிலும் மிரட்டி பணம் பறிப்பதிலும் முதன்மையாக இருக்கிறது. இவர்கள் சல்மான் கானை மான்வேட்டை வழக்கை வைத்து கொலை செய்ய திட்டமிட்டதாக செய்திகள் வெளியானதை நாம் அறிவோம்.

லாரன்ஸ் பிஷ்னோய்

யார் இந்த லாரன்ஸ் பிஷ்னொய்?

தனிச் சிறையில் அடைக்கப்பட்டாலும், பல சிறைகளுக்கு மாற்றப்பட்டாலும் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து உள்ளுக்குள் இருந்து தனது கும்பலைக் கட்டுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

லாரன்ஸ் பிஷ்னோயின் குடும்பம் தற்போது செல்வ செழிப்பாக இருந்து வருகிறது. லாரன்ஸின் உறவினர் ரமேஷ் பிஷ்னோய் கூறியிருப்பதன்படி, அவர்களது குடும்பம் ஆண்டுக்கு 35-40 லட்சத்தை சிறையில் உள்ள பிஷ்னோய்க்கு வழங்குகிறது. கண்ணுக்குத் தெரிந்து வெளிப்படையாகவே இத்தனை லட்சங்கள் செலவழிக்கப்பட்டால், லாரன்ஸுக்காக எத்தனைக் கோடிகள் செலவழிக்கப்படுகிறது என்பதை யாரால் கணிக்க முடியும்...

பாபா சித்திக்கின் கொலை, இந்த கும்பலை உடனடியாக அடக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்திருக்கிறது.

கும்பலின் விரிவான வெளிநாட்டு நடவடிக்கைகள் மற்றும் பிற குற்றவாளிகளுடனான தொடர்புகள் காவல்துறைக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை; கதறிய தாய்... வால்பாறையில் அதிர்ச்சி!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. அங்குள்ள ஊசிமலை எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் புலம்பெயர் தொழிலாளி... மேலும் பார்க்க

Lawrence Bishnoi: சல்மான் கானை கொல்லத் துடிக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் - யார் இந்த கேங் லீடர்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான்26 வருடங்களுக்கு முன்பு, செய்த தவறு, இப்போதுஅவரை துப்பாக்கிமுனையில்துரத்திக் கொண்டு இருக்கிறது. 1998-ல் ராஜஸ்தான் மாநிலம்,ஜோத்பூரில் 2 மான்களை சல்மான் கான் வேட்டையாடிய சம்ப... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு... சந்தேகத்தில் பெண்ணை அடித்துக் கொலை செய்த இளைஞர்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வசித்து வந்த ராணிக்கும் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு... மேலும் பார்க்க

Baba Siddique murder: பிஷ்னோய் கூட்டாளிகள் 5 பேர் கைது; குண்டு துளைக்காத கார் வாங்கிய சல்மான் கான்!

மும்பையில் கடந்த 12-ம் தேதி முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் அவரது மகன் அலுவலகத்திற்கு வெளியில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 2 பேர் உள்பட நா... மேலும் பார்க்க

Pannun Murder Plot : முன்னாள் RAW அதிகாரி; FBI -ஆல் தேடப்படும் குற்றவாளி - யார் இந்த விகாஸ் யாதவ்?

அமெரிக்க மண்ணில் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் விகாஸ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது அமெரிக்க புலன் விசாரணை அமைப்பான FBI.அமெரிக்க நீதித்துறை முன்னாள் இந்தி... மேலும் பார்க்க

நெல்லை: தனியார் நீட் பயிற்சி மையத்தில் சித்ரவதை - மாணவர்களை சரமாரியாக தாக்கிய வீடியோவால் அதிர்ச்சி

நீட் தேர்வு தேவையா இல்லையா என்ற விவகாரம் ஒரு பக்கம் விவாதமாக நீளூம் நிலையில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உயிரிழப்புகள் நடந்து வருவதும் சர்ச்சையானது. அத்துடன், சாதாரண ஏழை, எளிய மக்களும் த... மேலும் பார்க்க