செய்திகள் :

Pannun Murder Plot : முன்னாள் RAW அதிகாரி; FBI -ஆல் தேடப்படும் குற்றவாளி - யார் இந்த விகாஸ் யாதவ்?

post image

அமெரிக்க மண்ணில் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் விகாஸ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது அமெரிக்க புலன் விசாரணை அமைப்பான FBI.

அமெரிக்க நீதித்துறை முன்னாள் இந்திய அரசு அதிகாரியான விகாஸ் யாதவ் (39) குற்றவாளி என கடந்த செவ்வாய் அன்று அறிவித்தது. விகாஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் பணியமர்த்தப்பட்ட முன்னாள் RAW அதிகாரியாவார்.

வியாழக்கிழமை புது தில்லியில், இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதித்துறை (DoJ) குற்றப்பத்திரிகையில் புகைப்படத்துடன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளா விகாஸ் குறித்து "அவர் இப்போது இந்திய அரசின் ஊழியர் அல்ல" எனக் கூறினார்.

தீவிர காலிஸ்தானி அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது கொலை முயற்சி நடத்தப்பட்டது. குர்பத்வந்த் சிங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் இந்த வழக்கில் விகாஸ் யாதவ் மீது கூலிக்கு கொலை செய்தல், பணமோசடி உள்ளிட்ட குற்றங்களைப் பதிந்திருக்கிறது அமெரிக்க நீதித்துறை.

FBI Logo

விகாஸ் யாதவ் முன்னதாக இந்தியாவின் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றியுள்ளார். ‘போர் கலை’ மற்றும் ‘ஆயுதங்களைக் கையாளுதல்’ ஆகியவற்றில் அதிகாரிக்கான பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.

இந்த வழக்கில் விகாஸ் யாதவ் முதன்மை குற்றவாளி அல்ல. “CC-1” (co-conspirator) அதாவது இணைச் சதிகாரர் எனக் கருதப்படுகிறார். "இந்திய அரசு அதிகாரியான இவர், மற்றொரு குற்றவாளியுடன் இணைந்து அமெரிக்க குடிமகனை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார்." என்றார் FBI இயக்குனர் கிறிஸ்டோபர் ரே (Christopher Wray).

இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளி நிகில் குப்தா கடந்த ஆண்டு செக் குடியரசு நாட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

முன்னாள் RAW அதிகாரி விகாஸ் யாதவின் மூன்று புகைப்படங்களுடன் 'wanted' போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விகாஸ் யாதவ் என்ற நபர் விகாஸ் என்றும் அமனத் அன்றும் அறியப்படுகிறார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குர்பத்வந்த் சிங் பன்னுன்

அமெரிக்க வழக்குரைஞர்கள் கூறுவதன்படி, குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய விகாஸ் யாதவ் மற்றும் நிகில் குப்தா சார்பில் கொலையாளி ஒருவருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வசித்துவரும் விகாஸ் யாதவ் இந்த வழக்கில் இங்கிருந்தே துணை புரிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த கொலை முயற்சியில் இந்திய அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை என மறுத்துள்ளது அரசு. அமெரிக்கர் மீதான கொலை முயற்சியை விசாரிக்க விசாரணை ஆணையமும் அமைத்துள்ளது இந்திய அரசு.

இந்த வழக்கில் இந்திய அரசின் ஒத்துழைப்பு திருப்தி அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் கூடுதல் ஒத்துழைப்பு தேவை என்றும் கேட்டுக்கொண்டனர்.

இந்திய விசாரணைக் குழுவின் தகவல்களை அமெரிக்க விசாரணைக் குழுவுக்கும் அவர்களது குழுவின் தகவல்களை இந்தியாவுக்கும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்டுள்ளார் அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்.

திருமணம் மீறிய உறவு... சந்தேகத்தில் பெண்ணை அடித்துக் கொலை செய்த இளைஞர்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வசித்து வந்த ராணிக்கும் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு... மேலும் பார்க்க

Baba Siddique murder: பிஷ்னோய் கூட்டாளிகள் 5 பேர் கைது; குண்டு துளைக்காத கார் வாங்கிய சல்மான் கான்!

மும்பையில் கடந்த 12-ம் தேதி முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் அவரது மகன் அலுவலகத்திற்கு வெளியில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 2 பேர் உள்பட நா... மேலும் பார்க்க

நெல்லை: தனியார் நீட் பயிற்சி மையத்தில் சித்ரவதை - மாணவர்களை சரமாரியாக தாக்கிய வீடியோவால் அதிர்ச்சி

நீட் தேர்வு தேவையா இல்லையா என்ற விவகாரம் ஒரு பக்கம் விவாதமாக நீளூம் நிலையில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உயிரிழப்புகள் நடந்து வருவதும் சர்ச்சையானது. அத்துடன், சாதாரண ஏழை, எளிய மக்களும் த... மேலும் பார்க்க

ஹோட்டலில் வேலைசெய்த சிறுவர்கள்மீது தாக்குதல்; அறைக்குள் அடைத்த உரிமையாளர் கைது! - என்ன நடந்தது?

சென்னை மேற்கு கே.கே.நகர், ஜவஹர் தெருவில் வசித்து வருபவர் மகாலிங்கம். இவர், கே.கே.நகர் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரின் ஹோட்டலில் நேபாளத்தைச் சேர்ந்த 16, 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் கடந்த ஆற... மேலும் பார்க்க

2 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த பெண்; காவலரான கணவரிடம் விசாரணை - சேலத்தில் சோகம்!

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ் (வயது 38). இவரது மனைவி பெயர் சங்கீதா (வயது 22). இவர்களுக்கு தர்ஷினி (வயது 4), ... மேலும் பார்க்க

`ஆபரேஷன் அகழி' : சாவி தர மறுப்பு; கிரேன் மூலம் லாக்கரையே தூக்கிய போலீஸ் - திருச்சியில் நடந்தது என்ன?

ஆபரேஷன் அகழிதிருச்சி மாவட்ட போலீஸாருக்கு பொதுமக்களிடமிருந்து போலி ஆவணம் தயாரித்து நிலங்களை அபகரித்து உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து, திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்.பி, திருச்சி மா... மேலும் பார்க்க