செய்திகள் :

பெங்களூரு டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்தியது நியூஸிலாந்து

post image

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

டபிள்யுடிசி தொடரின் ஒரு பகுதியாக இந்தியா-நியூஸி. அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் பெங்களூரில் நடைபெறுகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 46 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது. நியூஸி. அணி 402 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 231/3 ரன்களுடன் நான்காவது நாள் ஆட்டத்தை சனிக்கிழமை தொடங்கியது.

சர்ஃப்ராஸ் கான்-ரிஷப் பந்த் இணைந்து அதிரடியாக ஆடியதால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சர்ஃப்ராஸ் கான் அதிரடியாக ஆடி தனது முதல் டெஸ்ட் சதத்தைப் 150 பதிவு செய்தார். நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் 99 ரன்களை விளாசி ஒரு ரன்னில் சதத்தை தவற விட்டார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பெளலிங்கில் நியூஸி. தரப்பில் மேட் ஹென்றி 3-102, வில்லியம் ஓரேர்க் 3-92 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற மும்முரம்: நியூஸி.-தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை நியூஸி. அணி வீரர்கள் டாம் லத்தம்-டேவன் கான்வே தொடங்க வந்தபோது, போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் நியூஸிலாந்து அணி கடைசி நாள் ஆட்டத்தை ஞாயிற்றுகிழமை தொடர்ந்தது. அந்த அணி, இந்திய அணி நிர்ணயித்த 107 ரன்கள் இலக்கை 27.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எளிதாக எட்டிப்பிடித்தது.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வில் யங் 48, ரச்சின் ரவீந்திரா 39 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. அத்துடன் 36 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது.

3 மணி நேர மோசமான ஆட்டத்தை வைத்து அணியை மதிப்பிட முடியாது: ரோஹித் சர்மா

3 மணி நேர மோசமான ஆட்டத்தை வைத்து இந்திய அணியை மதிப்பிடுவது நியாயமாக இருக்காது என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில... மேலும் பார்க்க

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க விரும்புவதாக ஸ்ரேயாஸ் ஐயர் விருப்பம் தெரிவித்துள்ளார்.ரஞ்சி கோப்பை எலைட் தொடரில் மகாராஷ்டிரத்துக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர... மேலும் பார்க்க

உடற்தகுதி சோதனையில் இரண்டு முறை தோல்வியடைந்தவரால் பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உடற்தகுதி சோதனையில் இரண்டு முறை தோல்வியடைந்த வீரர் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக மாறியுள்ளார்.பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போ... மேலும் பார்க்க

இலக்கு குறைவாக இருக்கலாம், இந்தியாவை வெல்வது எளிதல்ல: நியூசி. வேகப் பந்துவீச்சாளர்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது எளிதாக இருக்கப் போவதில்லை என நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் வில்லியம் ஓ’ரூர்க் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் விளையாடிவிட்டு அதே நாளில் இந்தியா சென்றுவிடுங்கள்; செவிசாய்க்குமா பிசிசிஐ?

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை விளையாட வைக்க புதிய யோசனையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: நியூசிலாந்துக்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில... மேலும் பார்க்க