செய்திகள் :

முதல் டெஸ்ட்: நியூசிலாந்துக்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

post image

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 402 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ரச்சின் ரவீந்திரா சதம் விளாசி அசத்தினார். அவர் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டெவான் கான்வே 91 ரன்களும், டிம் சௌதி 65 ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிக்க: சச்சினுக்கு இருந்த அதே பிரச்னை..! 7 முறை சதமடிக்காமல் ஆட்டமிழந்த ரிஷப் பந்த்!

107 ரன்கள் இலக்கு

முதல் இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சரிவிலிருந்து மீண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. சிறப்பாக விளையாடிய சர்ஃபராஸ் கான் சதம் விளாசி அசத்தினார். அவர் 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அதிரடியில் மிரட்டிய ரிஷப் பந்த் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஒரு ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். விராட் கோலி 70 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி மற்றும் வில்லியம் ஓ’ரூர்க் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி மற்றும் கிளன் பிளிப்ஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: ரச்சின் ரவீந்திரா, சர்ஃபராஸ் கானுக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!

இந்திய அணி நியூசிலாந்தைக் காட்டிலும் 106 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து, நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி ரன் ஏதும் எடுக்காமல் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. டாம் லாதம் மற்றும் டெவான் கான்வே இருவரும் களத்தில் உள்ளனர்.

கடைசி நாளில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 107 ரன்களும், இந்தியாவின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.

பாகிஸ்தானில் விளையாடிவிட்டு அதே நாளில் இந்தியா சென்றுவிடுங்கள்; செவிசாய்க்குமா பிசிசிஐ?

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை விளையாட வைக்க புதிய யோசனையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில... மேலும் பார்க்க

சச்சினுக்கு இருந்த அதே பிரச்னை..! 7 முறை சதமடிக்காமல் ஆட்டமிழந்த ரிஷப் பந்த்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். 90-100 ரன்களுக்குள் 7ஆவது முறையாக ஆட்டமிழந்துள்ளார். கிரிக்கெட்டில் இதற்கு நெர்வஸ் 90ஸ் என்பார்கள். சதம் அடிக்கும் முன்பு பதற்... மேலும் பார்க்க

ரச்சின் ரவீந்திரா, சர்ஃபராஸ் கானுக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரையும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.இ... மேலும் பார்க்க

தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்..! 99 ரன்களில் ஆட்டமிழப்பு!

இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பந்த் புதிய சாதனையை படைத்துள்ளார். 62 இன்னிங்ஸில் 2,500 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்பாக எம்.எஸ்.தோனி 69 இன்னிங்ஸில் இந்த சாதனையை தன்வ... மேலும் பார்க்க

மகளிர் டி20: முதல்முறையாக கோப்பையை வெல்லப்போவது யார்?

மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தும் தென்னாப்பிரிக்கா அணியும் நாளை (அக்.20) இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. 2009இல் தொடங்கிய மகளிர் டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. ... மேலும் பார்க்க

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!

இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த அக்.16 அன்று பெங்களூரில் தொடங்கியது. முதல்நாள் மழையினால் பாதிக்க 2ஆம் நாளில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய நியூசில... மேலும் பார்க்க