செய்திகள் :

Udhayanidhi : `அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார்!' - தமிழிசைக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

post image
"ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!" என்று தமிழிசைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.

தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ``தம்பி உதயநிதி ஸ்டாலின், நேற்று கிரிவலம் போயிருக்கிறார். பவன் கல்யாண் சொன்னது உதயநிதி மனதில் தைத்துவிட்டது என்று நினைக்கிறேன். தவறுகளைத் திருத்திக்கொண்டு கிரிவலம் போக ஆரம்பித்திருக்கிறார் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார். மேலும், “தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் விடுபடுவது எனக்கும் ஒப்புதல் கிடையாது.

தமிழிசை செளந்தரராஜன்

தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்பதில் நானும் உறுதியாக இருக்கிறேன். ஆனால், உள்நோக்கம் இல்லாமல் நடந்த ஒன்றுக்கு உள்நோக்கம் கற்பித்து பூதாகரமாக அரசியல் ஆக்குவது தவறு. முதல்வர் செல்லும் ஒரு நிகழ்வில் யாரோ தவறாகப் பாடினால் அதற்கு முதல்வர் பொறுப்பாக முடியாது” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழிசைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின், "இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது! அக்கா அவர்களே,

திருவண்ணாமலையில் ‘கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ‘சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல – ‘சரி’ வலம். ஓடாத தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும்.

நியாயம் தானே. நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது. ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.

`சிதம்பரம் தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்களா? ஆணவம் நல்லதல்ல...’ - காட்டமான உயர் நீதிமன்றம்!

சிதம்பரம்: `தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல!’ - நீதிமன்றம் கடுகடுத்த பின்னணி சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜெயசீலா என்ற பெண் பக்தை ஒருவரை கனகசபை மீது அழைத்துச் சென்றதற்காக, தர்ஷன் (எ) நடர... மேலும் பார்க்க

வாரிசுக்காக கொடுத்து வாங்கும் சகோதரர்கள்: உத்தவைத் தொடர்ந்து மகனை தேர்தலில் இறக்கும் ராஜ் தாக்கரே!

மகாராஷ்டிராவில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே உயிரோடு இருந்தவரை அவரது குடும்பத்தில் இருந்து யாரும் தேர்தல் அரசியலில் ஈடுபட்டது கிடையாது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. முதன் முதலில் உத்தவ் தாக்கரே ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து: `நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்' - கமல் கண்டனம்

ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று கலந்துகொண்ட தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது ஏற்பட்ட குழப்பத்தில், `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்' வ... மேலும் பார்க்க

ஒரே பதிவெண்ணில் இயக்கப்படும் 3 அரசு பேருந்துகள்? - போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுவது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளில், மூன்று பேருந்துகளுக்கு `TN74 N 1813' என்ற ஒரே பதிவெண் உள்ளதாக, சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் ப... மேலும் பார்க்க

`துணையாக இருக்க மட்டும்தான் துரைமுருகன்; துணை முதல்வர் என்றால் அது உதயநிதிதான்' - ஆர்.பி.உதயகுமார்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் புதூரில் அ.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்... மேலும் பார்க்க

2026: திமுக-வில் சீனியர்களுக்கு வேட்டு? ; பொன்முடியின் ‘சீட்’ பேச்சு - பின்னணி என்ன?!

`சீட் கிடைக்காமல் போகலாம்!'விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும், அமைச்சருமான பொன்முடி பேசும்போது, "விழுப்புரம் மாவட்... மேலும் பார்க்க