செய்திகள் :

பிகாா் கள்ளச் சாராய பலி எண்ணிக்கை 37-ஆக உயர்வு

post image

பிகாரின் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது.

பிகாரின் சரண், சிவான் மாவட்டங்களில் உள்ள 16 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட பலா் மருத்துவமனைகளில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா். புதன்கிழமை காலைமுதலே படிப்படியாக பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்தனா். சிலா் கண் பாா்வையையும் இழந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி கள்ளச்சாரயம் காய்ச்சுபவா்கள், விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில முதல்வா் நிதீஷ் குமாா் உத்தரவிட்டுள்ளாா். இந்த நிலையில் பைகுந்த்பூரில் கள்ளச் சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர்.

ஜார்க்கண்டில் 70 தொகுதிகளில் காங்கிரஸ் - ஜேஎம்எம் போட்டி! - ஹேமந்த் சோரன்

இதனால் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. சடலங்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்த பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்றும் டிஐஜி தெரிவித்துள்ளார்.

சிவான், சரண் மற்றும் பாட்னா மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இரு மாவட்டங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே பூரண மதுவிலக்குதான் நிதிஷ்குமாரின் மிகப்பெரிய ஊழல் என முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.

முன்னதாக, கோபால்கஞ்ச் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அவ்தேஷ் தீட்சித் வெள்ளிக்கிழமை கூறியதாவது, சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இந்த விவவகாரத்தை விசாரித்து வருவதாகவும், 14 பேர் கைது செய்யப்பட்டு 200 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

ஹைதராபாத்: ஹிந்து அமைப்புகள் போராட்டத்தால் பதற்றம்! காவல்துறை தடியடி!

ஹைதராபாத்: சங்க் பரிவார் அமைப்புகளின் போராட்டத்தின்போது காவல்துறையினர் மீது காலணிகள் வீசப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.செகந்திராபாத் நகரிலுள்ள முத்யாலம்மன் கோயிலுக்குள் கடந்த அக்.14-ஆம் தேதி அதிகா... மேலும் பார்க்க

பூரண மதுவிலக்குதான் நிதீஷ்குமாரின் மிகப்பெரிய ஊழல்- தேஜஸ்வி யாதவ்

பூரண மதுவிலக்குதான் நிதீஷ்குமார் ஆட்சியின் மிகப்பெரிய ஊழல் என பிகார் முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். பிகாரின் சரண், சிவான் மாவட்டங்களில் உள்ள 16 கிராமங்களில் கள்ளச்சாராயம் ... மேலும் பார்க்க

சல்மான் கான் மீது கொலை முயற்சி: பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவருக்கு போலீஸ் காவல்

ஹிந்தி நடிகர் சல்மான் கானை கொல்ல முயற்சித்த சம்பவத்தில், கைது செய்யப்பட்ட பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவரை நான்கு நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இரண்டு நாள்களுக்க... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளைப் போல் செயல்பட முடியாது! -தலைமை நீதிபதி

பனாஜி(கோவா): மக்களின் மன்றமாக செயல்படுவதே உச்சநீதிமன்றத்தின் கடமையாகும் என தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார். கோவாவில் இன்று(அக். 19) நடைபெற்ற உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் மாநாட்டில்... மேலும் பார்க்க

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணா சனிக்கிழமை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, உடல் பரிசோதனைக்காக பெங்களூரு பழைய விமான நிலைய சாலையில் உள்ள... மேலும் பார்க்க

கோடா பயிற்சி மையங்கள்: மாணவர் சேர்க்கை குறைந்தாலும் குறையாத தற்கொலைகள்

ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில், இந்த கல்வியாண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர் சேர்க்கை குறைந்தாலும், தற்கொலைகள் குறையாத அவலத்தை... மேலும் பார்க்க