செய்திகள் :

Ind Vs Nz: 'திடீரென ஆட்டத்தை நிறுத்திய நடுவர்; அப்செட் ஆன ரோஹித்; என்ன நடந்தது?

post image
இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 107 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்திருக்கும் நிலையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட சீக்கிரமே நடுவர்கள் ஆட்டத்தை முடித்திருந்தனர். இதனால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கடும் அப்செட் ஆகி நடுவர்களிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். களத்தில் என்ன நடந்தது?

இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்களை எடுத்திருந்தது. சர்ப்ராஸ் கான் சதமடித்திருந்தார். ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி 99 ரன்களை எடுத்திருந்தார். நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் டார்கெட். மாலை 5:15 மணி வரை போட்டிக்கான நேரம் இருந்தது. நியூசிலாந்து அணி பேட்டிங் ஆட வந்த போது இன்றைய நாளின் ஆட்ட நேரம் முடிய கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் இருந்தது. பும்ரா முதல் ஓவரை வீச ஆரம்பித்தார். டாம் லேதம் ஸ்ட்ரைக்கில் இருந்தார். மழை குறுக்கீடுகளுக்கு இடையே பிட்ச் ஈரப்பதமாக இருந்ததால் பும்ராவுக்கு பந்து நன்றாகவே மூவ் ஆனது. நான்கு பந்துகளையும் நன்றாக வெளியேயும் உள்ளேயும் திருப்பியிருந்தார். மூன்றாவது பந்தில் lbw க்கு ரிவியூவ்வும் எடுத்தார்கள். ஆனால், pitching outside leg என்பதால் ரிவியூவை இந்தியா இழந்தது. ஆனாலும் பந்து மூவ் ஆனதை பார்க்கையில் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு விக்கெட் கிடைக்கலாம் எனும் சூழல் இருந்தது. இந்நிலையில்தான் நடுவர்கள் `போதிய வெளிச்சம் இல்லை என்பதால் ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம்’ என்றனர்.

இதில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கடும் அப்செட் ஆனார். நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பும்ராவின் அந்த ஒரு ஓவரையாவது நிறைவு செய்ய வேண்டும் என்பது ரோஹித்தின் விருப்பம். எதாவது ஒரு விக்கெட் விழுந்துவிட்டால் கூட நியூசிலாந்தை உளவியல்ரீதியாக தாழ்வாக்கிவிடலாம் என்பது ரோஹித்தின் எண்ணம். அது நடக்கவில்லையென்பதால் ரோஹித் கடும் அப்செட் ஆனார்.

நாளை நியூசிலாந்தை 107 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். 2004 இல் ஆஸ்திரேலியாவை இந்திய அணி 107 ரன்களுக்குள் சுருட்டியிருக்கிறது. அதை மீண்டும் இங்கே நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.!

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்:https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

Sarfaraz Khan: 'வாய்ப்புங்றது தேவதை மாதிரி..!' - பெங்களூருவில் சாதித்த சர்ப்ராஸூம் பின்னணியும்!

`வாய்ப்புங்றது தேவதை மாதிரி, அது கிடைக்கிறப்ப மதிச்சு ஏத்துக்கனும். இல்லைன்னா எப்பவுமே அது திரும்ப கிடைக்காது.’ சர்ப்ராஸ் கானின் கரியரை இந்த வரிகளுக்குள் அடக்கிவிடலாம். அவருக்கான வாய்ப்புகள் அவருக்கு ... மேலும் பார்க்க

Ind Vs Nz : 'இந்தியாவை எதிர்கொள்ள ரச்சினுக்கு உதவிய சிஎஸ்கே' - என்ன நடந்தது?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 358 ர... மேலும் பார்க்க

Ranji Trophy: 'தமிழக மைதானத்தை கண்டு வியந்த ஜெயதேவ் உனத்கட்' - அசர வைத்த கோவை அசோசியேஷன்

கோயம்புத்தூர் கிரிக்கெட் மைதானத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை கண்டு வியந்து போய் பாராட்டியிருக்கிறார் சவுராஷ்ட்ரா கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜெயதேவ் உனத்கட்.கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி முதல் ரஞ்சிக் கோப்ப... மேலும் பார்க்க

Chess : செஸ் விளையாட்டில் கோலோச்சும் இந்தியா; சாம்பியன்களின் தலைநகராகும் தமிழ்நாடு!

பொற்காலம் என்போமே... அப்படியொரு காலத்தில்தான் இந்திய சதுரங்கம் கம்பீரமாகக் கால் பதித்திருக்கிறது.45-வது செஸ் ஒலிம்பியாடில் இந்தியா பொதுப்பிரிவு மற்றும் பெண்களுக்கான பிரிவு என இரண்டிலுமே வென்று வந்திரு... மேலும் பார்க்க