செய்திகள் :

துப்பாக்கி முனையில் ரூ. 2 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை!

post image

தில்லியில் ஓய்வுபெற்ற விஞ்ஞானியை துப்பாக்கி முனையில் மிரட்டி, கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் ஓய்வுபெற்ற விஞ்ஞானி ஷிபு சிங், தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (அக். 18) பிற்பகலில் இரண்டு பேர் தங்களை கூரியர் பணியாளர்களாகக் காட்டிக் கொண்டு, ஷிபுவின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

ஆனால், வீட்டுக்குள் நுழைந்ததும் ஷிபுவையும் அவரது மனைவியையும் துப்பாக்கி முனையில் மிரட்டி, கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்களை எதிர்த்த ஷிபுவை தாக்கிவிட்டு, அங்கிருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியுள்ளனர்.

இதையும் படிக்க:வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலையல்ல: விஜய்

இந்த சம்பவம் முழுவதையும் ஷிபு தனது மகனுக்கு போனில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினரிடம் ஷிபுவின் மகன் புகார் அளித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஷிபுவையும் அவரது மனைவியையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நினைவேந்தல் நிகழ்வில் உணவு உண்ட 200 பேருக்கு உடல் பாதிப்பு!

அஸ்ஸாம் மாநிலத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றில் உணவு உண்ட 200 பேருக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மாவட்டத்தில் பிரதீவ்ப் கோகய் என்பவரின் தாயாருக்கு நினைவேந்தல் நடைபெற்றுள... மேலும் பார்க்க

இந்தூருக்கு விரைவில் முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் டபுள் டெக்கர் பேருந்து சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதன் மேயர் புஷ்யமித்ர பார்கவா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 60 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்... மேலும் பார்க்க

சல்மான் கான் என்ன செய்தார்? கொலை மிரட்டல் ஏன்? விரிவாக!!

பாலிவுட்டில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம்வரும் சல்மான் கான் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை முயற்சியில் இருந்து காப்பதற்கு பல்வேறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சல்மான் கானும் காவல்துறையின... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலி

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தௌல்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு பேருந்து சனிக்கிழமை இரவு 11 மணியள... மேலும் பார்க்க

ரயில்வே காலி பணியிடங்களை நிரப்ப 10 ஆண்டுகள் போதவில்லையா? ப. சிதம்பரம் கேள்வி!

ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு சரிவர முயற்சிகள் எடுக்காதது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து, ரயில்வே துறையில் பெரும்பாலான இடங்க... மேலும் பார்க்க

கன்னட நடிகர் சுதீப்பின் தாயார் காலமானார்

கன்னட நடிகர் சுதீப்பின் தாயார் சரோஜா ஞாயிற்றுக்கிழமை தனியார் மருத்துவமனையில் காலமானார்.வயது முதிர்வு தொடர்பான நோய் காரணமாக கன்னட நடிகர் சுதீப்பின் தாயார் சரோஜா(80) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப... மேலும் பார்க்க