செய்திகள் :

Dhoni : வரும் ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா? - சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் கொடுத்த அப்டேட்!

post image
வருகிற ஐபிஎல் சீசனில் சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவாரா? என்பது பற்றி அதன் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் பேசியிருக்கிறார்.

2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏலம் என்பது வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்கவைத்துள் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விவரங்களை அறிவிக்க வரும் 31-ம் தேதியே கடைசி நாள்.

தோனி

இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சி.எஸ்.கே அணியில் முன்னாள் கேப்டன் தோனி தக்க வைக்கப்படுவாரா? என்ற பெரிய கேள்வி எழுந்திருக்கிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சி.எஸ்.கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கலந்துகொண்டபோது அவரிடம் தோனி இந்த சீசனில் விளையாடுவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

காசி விஸ்வநாதன்

அதற்கு பதிலளித்த அவர், "சி.எஸ்.கே அணியில் தோனி விளையாட வேண்டும் என்று எங்களுக்கும் ஆசைதான். ஆனால் அது குறித்து இன்னும் தோனி எங்களிடம் உறுதிப்படுத்தவில்லை. ‘அக்டோபர் 31-ம் தேதிக்கு முன்னதாக கூறுகிறேன்’ என்று தோனி சொல்லி இருக்கிறார். எங்களுக்கும் அவர் சி.எஸ்.கே-வில் ஆட வேண்டும் என்கிற ஆசையும், அவர் ஆடுவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.” என்று காசி விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

IND Vs NZ : ரச்சினின் வெற்றிக்கு உதவிய 'சென்னை' பயிற்சி - ஆட்டநாயகனான CSK வீரர் பேசியதென்ன?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 6 டக் அவுட்டுடன் 46 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அ... மேலும் பார்க்க

IND Vs NZ : 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் வெற்றி பெற்ற நியூசிலாந்து!

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.... மேலும் பார்க்க

Ind Vs Nz : ``46 ஆல் அவுட்டுக்கு நானே பொறுப்பு!'' - என்ன சொல்கிறார் கேப்டன் ரோஹித்?

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே உள்ளூர் மைதானங்களில் இந்தியாவின் குறைந்தபட்ச... மேலும் பார்க்க

INDvNZ: `முடிச்சுவிட்டீங்க போங்க' - 46 ரன்களுக்கு ஆல் அவுட்; இந்தியா சொதப்பியது எங்கே?

பெங்களூருவில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. கடைசியாக 2020-21 பார்டர் கவாஸ்கர் தொடரில் அடிலெய்... மேலும் பார்க்க

INDvNZ : 0,0,0,0 - 4 வீர்ரகள் டக்; சுதாரிக்காத ரோஹித்; கோலி - பெங்களூருவில் தடுமாறும் இந்தியா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று மழையினால் ஆட்டம் முழுமையாக தடைப்பட்டிருந்தது. இன்றுதான் போட்டி தொடங்கியது. முதல் செ... மேலும் பார்க்க

IPL 2025 : தக்கவைக்கப்படும் வீரர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம்... BCCI கொடுத்த புதிய அப்டேட்!

ஐபிஎல் 2025-ல் வீரர்களுக்கான சம்பள தொகை அடுக்குகளில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது பிசிசிஐ. இதன் மூலம் ரிட்டன்ஷன் செய்யப்படும் வீரர்களுக்கு அவர்கள் விருப்பப்படி 75 கோடியை பிரித்துக்கொடுக்க... மேலும் பார்க்க