செய்திகள் :

Gambhir - Rohit: கம்பீர் - ரோஹித் காம்போவில் இந்திய அணி அடுத்தடுத்து `அப்செட்’... மீளும் வழி என்ன?!

post image

ஒரு சாம்பியன் அணியும், முன்னாள் சாம்பியனும் இணையும்போது அந்த அணி அடுத்தடுத்து புதிய உச்சங்களை நோக்கி முன்னேறும் என்றுதான் எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால், இந்திய அணிக்கோ அதற்கு நேரெதிராக நடந்துகொண்டிருக்கிறது. இந்தாண்டு ஐ.பி.எல்லில் தன்னுடைய தலைமையில் இரண்டு கோப்பைகளை வென்று கொடுத்த கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக இணைந்த கவுதம் கம்பீர், சுனில் நரனை மீண்டும் ஓப்பனிங் இறங்கவைத்தது உள்ளிட்ட மாற்றங்களைச் செய்து, சொல்லி வைத்து அடிப்பது போல கோப்பையைத் தட்டித் தூக்கினார். அதேநேரத்தில், டி20 உலகக் கோப்பையோடு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் முடிவதாகச் செய்திகள் வெளியாக, இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் எனப் பேச்சுகள் அடிபட்டது.

கவுதம் கம்பீர்

பின்னர், இந்திய அணி டி20 உலகக் கோப்பையை த்ரில்லாக வென்ற கதையை அனைவரும் அறிந்ததே. டி20-யில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியனான இந்திய அணிக்கு, ஐ.பி.எல் சாம்பியன் கவுதம் கம்பீர் ஜூலையில் தலைமைப் பயிற்சியாளரானார். கம்பீர் - ரோஹித் காம்போவில் இந்திய அணிக்கு புதிய பயணம் தொடங்கியது. இந்த காம்போ மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் குவிந்தது. ஆனால், எதிர்பாராததெல்லாம் இந்திய அணிக்குத் தற்போது நடந்துகொண்டிருக்கிறது.

இலங்கையிடம் வரலாற்றுத் தோல்வி!

சங்ககரா, ஜெயவர்த்தனே, தில்ஷன், குலசேகரா உள்ளிட்டோரின் அடுத்தடுத்த ஓய்வால் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக மீண்டும் பழைய ஃபார்முக்கு வர தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது இலங்கை அணி. அத்தகைய அணியுடன் கடந்த ஆகஸ்டில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி இறங்கியது. இலங்கையை எளிதாக வென்றுவிடலாம் என்றிருந்த இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

இலங்கை அணி

இலங்கை அணி இரண்டு போட்டிகளை வென்று 27 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்தது. ரோஹித், கோலி போன்ற அனுபவ வீரர்கள் இருந்தும் இந்திய அணி தோற்றது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

ஒருநாள் தொடரில் முதல்முறையாக அனைத்து விக்கெட்டுகளை இந்தியா

இலங்கையிடம் இந்திய அணி அடைந்த தோல்வி, ஒருநாள் தொடர் வரலாற்றில் முதல்முறையாக மோசமான சாதனைக்கு வித்திட்டது. அதாவது, இந்தத் தொடரில் மூன்று போட்டிகளிலும் இலங்கை பந்துவீச்சாளர்களிடம் அனைத்து விக்கெட்டுகளையும் தாரைவார்த்தது இந்தியா. இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா முதல்முறையாக அனைத்து விக்கெட்டுகளையம் இழந்து மோசமான சாதனையை வரலாற்றில் பதிவுசெய்தது.

ரோஹித் ஷர்மா

ஓர் ஆண்டை ஒரு வெற்றிகூட இல்லாமல் கடக்கும் இந்தியா!

இலங்கையுடனான ஒருநாள் போட்டித் தொடர் இந்தியாவுக்கு மேலும் மோசமான சாதனையைப் பரிசளித்திருக்கிறது. 2024-ல் ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தளவில் இலங்கையுடனான மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி ஆடியிருக்கிறது. இந்த ஆண்டில் மீதமிருக்கும் இரண்டு மாதங்களில் இந்திய அணிக்கு ஒரு ஒருநாள் போட்டிகூட இல்லை.

கம்பீர் - ரோஹித்

இதனால், இலங்கையுடன் ஒரு டை, இரண்டு தோல்வி கண்டிருக்கும் இந்திய அணி, 2024-ஐ ஒரு ஒருநாள் போட்டி வெற்றிகூட இல்லாத ஆண்டாகக் கடக்கிறது. இவ்வாறு, இந்திய அணிக்கு ஓர் ஆண்டில் ஒரு ஒருநாள் போட்டி வெற்றிகூட இல்லாமல் போவது கடந்த 45 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. கடைசியாக 1979-ல் இத்தகைய நிலைக்கு இந்திய அணி ஆளாகியிருந்தது.

சொந்த மண்ணில் முதல்முறையாக டெஸ்டில் 50 ரன்களுக்குள் சுருண்ட இந்தியா!

இலங்கையுடன் டெஸ்ட் தொடரை இழந்த அணி, போதாக் குறைக்கு வில்லியம்சன், டிரென்ட் போல்ட் ஆகியோர் இல்லை, எனவே நியூசிலாந்து அணியை எளிதாக வீழ்த்திவிடலாம் என்ற நினைப்பில் ரோஹித் அண்ட் கோ இருந்ததோ என்னவோ, பெங்களுருவில் நியூசிலாந்திடம் படுத்தேவிட்டது. மழையால் முதல்நாள் டாஸ் கூட போடவில்லை. அப்படியிருக்கும்போது இரண்டாவது நாளில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வுசெய்து சொந்த அணிக்கே சர்ப்ரைஸ் கொடுத்தார்.

நியூசிலாந்து அணி

முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர்களால் முழுமையாக 32 ஓவர்களைக் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. 46 ரன்களில் சுருண்டது இந்தியா. கோலி, கே.எல். ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் உட்பட 5 பேர் டக் அவுட். ஜெய்ஷ்வால், ரிஷப் பண்ட் தவிர ஒருத்தர்கூட இரட்டை இலக்க ரன்களைத் தொடவில்லை. ஆனால், நியூசிலாந்து வீரர்களோ இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பவுண்டரி லைன் இந்தப்பக்கம் தான் இருக்கிறது என்று ஃபோர், சிக்சர்களாகக் காட்டிக்கொண்டிருந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் 400 ரன்கள் வரைத் தாக்குப்பிடித்த இந்திய அணி, மீண்டும் நியூ பால் வந்ததும் அப்படியே படுத்துவிட்டது.

சொந்த மண்ணில் 36 வருடங்களுக்குப் பிறகு நியூசிலாந்திடம் வீழ்ந்த இந்தியா!

இந்தியா கடைசியாக சொந்த மண்ணில் 1988-ல் நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்திருந்தது. இப்போது நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிக்கொண்டிருக்கும் இந்தியா அணியில் ரோஹித், கோலியைத் வேறு யாரும் அப்போது பிறந்திருக்கக் கூட இல்லை. இவ்வாறிருக்க, பெங்களூரு டெஸ்ட் தோல்வியின் மூலம், 36 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்திடம் அணியிடம் இந்தியா தோற்றிருக்கிறது.

இந்திய அணி

பேட்டிங் சொர்க்கபுரி சின்னசாமி ஸ்டேடியத்தில் மோசமான சாதனை படைத்த இந்தியா!

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் என்று சொன்னாலே பெரிய ஸ்கோர் மேட்ச்சாகத்தான் இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். பேட்ஸ்மேன்களுமே கூட குஷியாகிவிடுவர். அத்தகைய ஸ்டேடியத்தில் கடைசியாகப் பாகிஸ்தான் 2005-ல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வென்றிருந்தது. அதன்பிறகு, இந்த ஸ்டேடியத்தில் ஒரு டெஸ்டில் கூட தோற்காத இந்தியா, நியூசிலாந்துடனான தோல்வியால் 19 வருடங்களுக்குப் பிறகு பெங்களூரூவில் முதல் தோல்வியைப் பதிவுசெய்திருக்கிறது.

மீளும் வழி என்ன?

ஆட்டத்தில் பேட்ஸ்மேனாகவோ அல்லது பவுலராகவோ அவரவர் தங்களின் பங்களிப்பை செலுத்துவதை போலவே, ஃபீல்டராக அனைவருமே சிறப்பாகச் செயல்பட வேண்டியது கட்டாயம். பெங்களூரு டெஸ்டில் அத்தனை ஃபீல்டிங் மிஸ்டேக். தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் கோலி, ஜடேஜாவைத் தவிர வேறு யாரும் களத்தில் பீல்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராகத் தெரியவில்லை. வரக்கூடிய காலங்களில் இந்திய டெஸ்ட் அணியில் ஃபீல்டிங் வெற்றிடத்தை நிரப்பவில்லையென்றால் வெற்றிபெறுவது நிச்சயமாக எளிதாக இருக்காது.

கவுதம் கம்பீர், ரோஹித் சர்மா விராட் கோலி

அணியின் வெற்றிக்கு சீனியர், ஜூனியர் வீரர்கள் என்பதையெல்லாம் விட ஃபெர்பாமென்ஸ் தான் முக்கியம். மேலும், ரோஹித் கேப்டன்சியில் இந்திய அணி உலகக் கோப்பை உட்பட பல்வேறு வெற்றிகளைக் குவித்தாலும், களத்தில் அவர் உட்பட மற்ற வீரர்கள் கேட்ச் மிஸ் செய்வது உள்ளிட்ட ஃபீல்டிங் மிஸ்டேக் செய்யும்போது தனது முகத்தில் அவர் வெளிப்படுத்தும் சின்னச் சின்ன விரக்தியும் அணியின் சூழலை நிச்சயம் பாதிக்கும். அணிக்குள் அதிரடி முடிவுகளை எடுக்காமல் வெற்றி என்பது சாத்தியமில்லை.

பொதுவாக புதிய பயிற்சியாளர் அணிக்குள் வரும் போது, புதிய முயற்சிகள் செய்யப்படும். அதுமாதிரி புதிய முயற்சிகள் செய்யப்பட்டு, அதன் முலம் முடிவுகளில் பாதிப்புகள் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் அதில் இருந்து விரைந்து முன்னேறுவது முக்கியம். காரணம் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டி என்பது தனி போட்டி கிடையாது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கம். ஒரு தோல்வியும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இனிவரும் போட்டிகளை இந்திய அணி எப்படி எதிர்கொள்ளப்போகிறது, எந்த மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.!

IND Vs NZ : ரச்சினின் வெற்றிக்கு உதவிய 'சென்னை' பயிற்சி - ஆட்டநாயகனான CSK வீரர் பேசியதென்ன?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 6 டக் அவுட்டுடன் 46 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அ... மேலும் பார்க்க

IND Vs NZ : 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் வெற்றி பெற்ற நியூசிலாந்து!

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.... மேலும் பார்க்க

Dhoni : வரும் ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா? - சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் கொடுத்த அப்டேட்!

வருகிற ஐபிஎல் சீசனில் சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவாரா? என்பது பற்றி அதன் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் பேசியிருக்கிறார்.2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிற... மேலும் பார்க்க

Ind Vs Nz : ``46 ஆல் அவுட்டுக்கு நானே பொறுப்பு!'' - என்ன சொல்கிறார் கேப்டன் ரோஹித்?

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே உள்ளூர் மைதானங்களில் இந்தியாவின் குறைந்தபட்ச... மேலும் பார்க்க

INDvNZ: `முடிச்சுவிட்டீங்க போங்க' - 46 ரன்களுக்கு ஆல் அவுட்; இந்தியா சொதப்பியது எங்கே?

பெங்களூருவில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. கடைசியாக 2020-21 பார்டர் கவாஸ்கர் தொடரில் அடிலெய்... மேலும் பார்க்க

INDvNZ : 0,0,0,0 - 4 வீர்ரகள் டக்; சுதாரிக்காத ரோஹித்; கோலி - பெங்களூருவில் தடுமாறும் இந்தியா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று மழையினால் ஆட்டம் முழுமையாக தடைப்பட்டிருந்தது. இன்றுதான் போட்டி தொடங்கியது. முதல் செ... மேலும் பார்க்க