பழங்கால ஆயுதம் முதல் நவீனரக துப்பாக்கி வரை... உதகையில் காவல்துறை நடத்திய ஆயுத கண்காட்சி!
காவல்துறையில் ஆரம்பகட்ட காலங்களில் பயன்படுத்தப்பட்ட பழங்கால ஆயுதங்கள் முதல் தற்போது பயன்பாட்டில் உள்ள நவீன ரக உபகரணங்கள் வரை மக்களுக்கு எடுத்துரைக்க விரும்பிய நீலகிரி மாவட்ட காவல்துறை, அதற்கான சிறப்பு கண்காட்சி ஒன்றினை ஊட்டியில் நடத்த முடிவு செய்தது. காவல்துறையினரின் கூட்ட அரங்கமான ஊட்டி சிறுவர் மன்றத்தில் கண்காட்சியை தொடங்கியுள்ளனர்.
துப்பாக்கிகள் கண்டு பிடிப்பதற்கு முந்தைய காலக்கட்டங்களில் புழக்கத்தில் இருந்த வாள், ஈட்டி, வேல் கம்பு, வளரி போன்ற ஆயதங்கள் மற்றும் நவீன ரக துப்பாக்கிகளையும் காட்சிக்கு வைத்துள்ளனர். மிகவும் அரிதான ஆயுதங்கள் மற்றும் வரலாற்று பின்னணி கொண்ட ஆயுதங்களை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
காவல்துறையின் ஆயுத கண்காட்சியில் சிறப்புகள் குறித்து தெரிவித்த ஆயுதப்படை பிரிவு காவல்துறையினர், "ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட பழைமையான துப்பாக்கியான வெடிமருந்தை கைகளால் நிரப்பி சுடும் ஆரம்பகால துப்பாக்கி கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
1903 - ம் ஆண்டு உருவாக்கப்பட்டு முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் பயன்படுத்தப்பட்ட 303 ரக துப்பாக்கிகள், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏகே 47 துப்பாக்கிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்திய இலகு ரக துப்பாக்கிகள், 1899- ல் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ரிவல்வர், தற்போது பயன்பாட்டில் உள்ள பிஸ்டல்களும் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சியின் சிறப்பு அம்சமாக 'மெர்சி கில்லிங் வெப்பன் ' எனப்படும் உயிருக்கு போராடும் உயிர்களை கொல்ல பயன்படுத்திய கருணை கொலை இயந்திரம் இடம்பெற்றிருக்கிறது. உயிர் பிரிவதற்கு நீண்ட நேரம் எடுக்காமல், சில நிமிடங்களில் உயிர் பிரிய 1700 -ம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட இந்த ஆயுதம் இந்தியாவில் மிகவும் அரிதாகவே பார்க்க முடியும்.
இதுதவிர நவீன ரக கண்ணீர் புகை குண்டுகள் துப்பாக்கிகள், குண்டு துளைக்காத கவச உடை, தோட்டாக்கள் என பல்வேறு ஆயுதங்கள் காட்சியில் இடம்பெற்றிருக்கிறது. பள்ளி குழந்தைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வரவழைத்து காண்பித்தோம் " என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb