நவ. 22-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!
முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நவ. 22 ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (நவ. 22) மாலை 7.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
இதையும் படிக்க: புறநகர் ரயில் சேவையில் நாளைமுதல் மாற்றம்: முழு அட்டவணை!
திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நவ. 25 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக இக்கூட்டம் கூட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.