செய்திகள் :

திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!

post image

சமீபத்தில் ரஞ்சி கோப்பை மும்பை அணியில் இருந்து பிருத்வி ஷா நீக்கப்பட்டடார்.

உடல் எடை, போட்டிக்கு முந்தைய பயிற்சியில் சரியாக கலந்து கொள்ளாதது போன்றவை பயிற்சியாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால் நீக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

மூத்த கிரிக்கெட் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், அஜிங்கியா ரஹானே, ஷர்துல் தாக்குர் போன்றவர்கள்கூட வலைப் பயிற்சியில் முறையாக கலந்து கொள்ளும் நிலையில் 25 வயதாகும் பிருத்வி ஷா கலந்து கொள்ளாதது மேலும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் ஏலத்திலும் ரூ.75 லட்சத்துக்குக் கூட யாரும் அவரை ஏலத்தில் தேர்வுசெய்ய முன்வரவில்லை.

சையத் முஷ்டக் அலி டி20 தொடரிலும் பெரிதாக எதுவும் செய்யவில்லை.

இந்த நிலையில் பிரித்வி ஷா குறித்து இங்கிலாந்து பேட்டர் கெவின் பீட்டர்சன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

சில தலைசிறந்த விளையாட்டு கதைகள் கம்பேக் கொடுத்த கதைகள்தான். பிருத்வி ஷாவிற்கு நல்ல மனிதர்கள் உடனிருந்து, அவரது நீண்டநாள் வெற்றிக்கு திட்டமிட்டால் அவரை உட்கார வைத்து பேசுங்கள். சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறி கிரிக்கெட் பயிற்சி செய்து உடல்நலத்தை நன்றாக வைக்கச் சொல்லுங்கள்.

சரியான பாதைக்குச் சென்றால் பழைய வெற்றிகள் மீண்டும் வரும். நல்ல திறமைசாலி எல்லாவற்றையும் வீணடிக்கிறார். அன்புடன் கேபி எனக் கூறியுள்ளார்.

பிருத்வி ஷா தனது 18 வயதில் அறிமுகமானபோது அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்று வர்ணிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அதன்பின்னர் அணியில் தேர்வாகவில்லை.

இந்த ரஞ்சி கோப்பையில் பரோடா அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸில் முறையே 7, 12 ரன்களும், மகாராஷ்டிர அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸில் முறையே 1, 39 ரன்கள் எடுத்திருந்தார்.

5 டெஸ்ட்டில் 339 ரன்கள் குவித்துள்ளார். 79 ஐபிஎல் போட்டிகளில் 1892 ரன்களும்147.46 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடியுள்ளார்.

விராட் கோலியின் சதங்கள் என்னை பயமுறுத்துகின்றன! -ஆஸி. முன்னாள் கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி குறித்து உலகக்கோப்பையை வென்று தந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்துள்ளார்.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத... மேலும் பார்க்க

36 பந்துகளில் உர்வில் பட்டேல் அதிரடி சதம்! 6 நாள்களில் 2 சாதனைகள்!

சையத் முஷ்டாக் அலி தொடரில் இந்தூரில் நடைபெற்ற 92-வது லீக் போட்டியில் உத்தரகண்ட் மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் அவ்னீஷ் சுதா உத்தரகண்ட் அணியை பேட்டிங் செய்ய ... மேலும் பார்க்க

மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வங்கதேசம்!

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வங்கதேசம்.மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் மேற... மேலும் பார்க்க

ரூ.2.63 கோடிக்கு ஏலம் போன டான் பிராட்மேன் தொப்பி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் சர் டான் பிராட்மேனின் 'பேக்கி கிரீன்' தொப்பி, டிசம்பர் 3 ஆம் தேதி சிட்னியில் நடந்த ஏலத்தில் விற்கப்பட்டது.1947-1948-ல் இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவிற்காக கடைசியாக ... மேலும் பார்க்க

பிங்க் பந்து கிரிக்கெட்டில் அசத்தும் டிராவிஸ் ஹெட்..! மீண்டும் ஆதிக்கம் செலுத்துவாரா?

பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.அடுத்த டெஸ்ட் போட்டி டிச.6ஆம் தேதி அடி... மேலும் பார்க்க

நியூசி., இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம்..! டபிள்யூடிசியில் புள்ளிகள் இழப்பு!

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு மெதுவாக பந்துவீசியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இந்தப் போட்டியி... மேலும் பார்க்க