Archana : `எனக்கு கொலை மிரட்டல்கள் வருது..!' - பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா குற்றச்சாட்டு
கடந்த சீசன் டைட்டில் வின்னரான அர்ச்சனா இந்த முறை அருண் பிரசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
பிக் பாஸ் வீட்டில் அருண் செய்யும் விஷயங்களுக்காக வெளியில் அர்ச்சனாவை நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர். "நானும் அருண் பிரசாத்தும் வெவ்வேறு நபர்கள். நானும் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறேன். ஒரு நண்பராக அருணுக்கு ஆதரவு தருகிறேன். ஆனால் அவர் செயல்களுக்கு நான் பொறுப்பாக முடியாது" என அர்ச்சனா கடந்த வாரம் மனமுடைந்து பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக அர்ச்சனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்தப் பதிவில்," வாழ்க்கை என்பது கிரிக்கெட் மாதிரி. கடந்த கேமில் நீங்கள் விளையாடியிருந்தாலும் இப்போது உங்களுக்கு பிடித்த அணியை நீங்கள் உற்சாகப்படுத்தலாம். எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. ஆசிட் வீசுவதாக மிரட்டுகிறார்கள். நான் பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டுகள் ஒரு உதாரணம்தான்,
எனக்கு இதுபோல நிறைய மிரட்டல்கள் வந்துள்ளன. இது எல்லைமீறிய ஒன்று. தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் கவனத்திற்கு நான் சம்பந்தப்பட்ட பக்கங்கள் மீதும் அதன் அட்மின்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன்" என குறிப்பிட்டு தனக்கு வந்த மெசேஜ்களின் ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்திருக்கிறார் அர்ச்சனா.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...