Rajini - Super Singer : `ரஜினி ஹிட்ஸ்' - சூப்பர் சிங்கரில் ரஜினி கொடுக்கவிருக்கும் அந்த கிஃப்ட்!
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கியது.
6 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முந்தைய சீசன்களில் இந்த மேடையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட போட்டியாளர்கள் பலரும், தற்போது முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி வருகிறார்கள்.
பின்னணி பாடகர் மனோ, சித்ரா மற்றும் இசையமைபாளர் டி. இமான்தான் இந்த சீசனின் நடுவர்கள். இந்தாண்டு கலந்து கொண்டுள்ள ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு நெகிழ்ச்சியான கதை இருக்கிறது. இதை தனி தனி காணொளிகளாகவும் வெளியிட்டிருந்தது விஜய் டி.வி. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த வார வீக்கெண்ட் எபிசோடுக்கு `ரஜினி ஹிட்ஸ்' என்ற சுற்றை நடத்த திட்டமிட்டிருக்கிறது சூப்பர் சிங்கர் குழு.
டிசம்பர் 7 மற்றும் 8-ம் தேதியில் ஒளிபரப்பாகும் எபிசோடில் போட்டியாளர்கள் அனைவரும் ரஜினியின் ஹிட் பாடல்களை பாடவிருக்கிறார்கள். இதில் சிறப்பாக பாடும் குழந்தையை தேர்வு செய்து ஒரு சிறப்பு பரிசை வழங்கிட திட்டமிட்டிருக்கிறார்கள். ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நடைபெறும் இந்த சுற்றில் சிறப்பாக பாடும் போட்டியாளருக்கு ரஜினி கையெழுத்திட்ட கிட்டாரை பரிசாக வழங்கவிருக்கிறார்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...