ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு வழிபாடு!
ஒடிஸாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாலை மார்க்கமாக சுமார் 1 கி.மீ நடந்துவந்து சுவாமி தரிசனம் செய்தார்.
குடியரசுத் தலைவர் சாதாரண பக்தரைப்போன்று கிரண்ட் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்றபோது, சாலையின் இருபக்கமும் நூற்றுக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்று அவரை வரவேற்றனர்.
கோயிலுக்கு வந்தடைந்த முர்மு பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகந்நாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோரை தரிசனம் செய்தார். தரிசனத்தில் இடையூரை தடுக்கும்வகையில் கோயில் சிறிதுநேரம் பொதுமக்கள் தரிசனத்திற்காக மூடப்பட்டது.
குடியரசுத் தலைவர் முர்முவுடன் அவரது மகள் இதிஸ்ரீ முர்முவுடன், ஒடிசா மோகன் சரண்மாஜி, துணை முதல்வர் பிரவதி பரிதா, புரி எம்பி சம்பித் பத்ரா மற்றும் பலர் இருந்தனர்.
வழிபாட்டுக்குப் பிறகு முர்மு கூறியது,
ஜெகந்நாதரின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக வந்துள்ளேன். மக்களுக்காக பிரார்த்தனை செய்தேன். அவர்களின் நல்வாழ்வை விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.
கோயிலுக்குள் சுமார் 30 நிமிடங்கள் இருந்தார். கோயில் நிர்வாகத்தினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். வழிபாடு முடித்துக்கொண்டு மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்குக் கோயிலிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.