தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
மாணவர்களிடம் பரிசோதனை: பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்!
சென்னை வனவாணி பள்ளியின் முதல்வர் சதிஷ்குமாரை பணியிடை செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வனவாணி பள்ளி முதல்வர் சதிஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து புதிய முதல்வராக பிரின்சி டாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
வனவாணி பள்ளியில் பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களுக்கு ஆக.19 ஆம் தேதி தாங்கு திறன் சோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தாங்கு திறன் சோதனை
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு அனுமதியின்றி தாங்கு திறன் சோதனை நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது.
பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது மனிதர்கள் எந்த அளவுக்கு சோதனையை தாங்குகிறார்கள் என்பதை அளவிடுவதுதான் தாங்கு திறன் சோதனை எனப்படுகிறது. மாணவர்கள் ஓடும்போது அவர்களுக்கு எவ்வளவு வியர்க்கிறது, வெளியேறும் வியர்வை அளவு குறித்தும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையை அனுமதியின்றி எடுத்துள்ளதாக பெற்றோர்கள் தரப்பிலிருந்து புகார் எழுந்தது.
இந்தப் புகாரில், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் வரும் 6 ஆம் தேதி ஆஜராக தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி நிர்வாகம் விளக்கம்
இந்நிலையில், பள்ளி முதல்வர் சதிஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு புதிய முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இனி வரும் காலங்களில் பெற்றோரின் அனுமதியின்றி இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படாது என்றும், உரிய அனுமதி பெறப்படும் எனவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!