``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
மாநில கலைத்திருவிழா போட்டிகள் ஒத்திவைப்பு
தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் சீரற்ற வானிலை காரணமாக ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கான மாநில கலைத்திருவிழா போட்டிகள் டிச.5, 6 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூா், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தற்போது மாநிலம் முழுவதும் சீரற்ற வானிலை நிலவுவதால் இந்த போட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது.
புதிய அட்டவணையின்படி, 1-5 வகுப்புகளுக்கான கலைத்திருவிழா கோவையில் ஜன.4-ஆம் தேதியும், 6 முதல் 8 வகுப்புகளுக்கான கலைத்திருவிழா ஜன.4-ஆம் தேதி திருப்பூரிலும் நடைபெறும். அதேபோன்று 9,10 ஆகிய வகுப்புகளுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் ஜன.3, 4 ஆகிய தேதிகளில் ஈரோட்டிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கான போட்டிகள் ஜன.3, 4 தேதிகளில் நாமக்கல் மாவட்டத்திலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.