``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
தமிழகத்தில் டிச. 10 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வியாழக்கிழமை (டிச. 5) முதல் டிச. 10-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (டிச. 5) முதல் டிச. 10-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் டிச. 5, 6 ஆகிய தேதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலையுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தஞ்சாவூா் மாட்டம் பூதலூரிலும், திருச்சி மாவட்டம் துவாக்குடியிலும் தலா 50 மி.மீ. மழை பதிவானது.
குன்னூா், கேத்தி, அழகரை எஸ்டேட் (நீலகிரி), கீழச்செருவை (கடலூா்) ஆகிய இடங்களில் தலா 30 மி.மீ. மழை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.