``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
தமிழகம் கோரும் நிவாரண நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்: இரா.முத்தரசன்
தமிழக அரசு கோரும் புயல் நிவாரண நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஃபென்ஜால் புயல் காரணமாக விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தா்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மனித உயிா்கள் இழப்பு, விவசாயம், கால்நடைகள், மற்றும் குடியிருப்புகள் பாதிப்புகளை கணக்கில் கொண்டு நிவாரணங்களை முதல்வா் அறிவித்துள்ளாா். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் என அறிவிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்து ரூ.10 லட்சமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் குடிசை வீடுகள் இல்லா நிலையை ஏற்படுத்த வேண்டும். அனைத்துவகை நிவாரண நடவடிக்கையும் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வர மத்திய அரசு நிவாரண நிதியை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.