போதைப்பொருள் வழக்கில் விடுவிப்பு; 25 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை திரும்பிய நடிகை ம...
தொண்டு நிறுவனத்துக்கு இயக்குநரான சாரா டெண்டுல்கர்!
இந்தியாவின் லெஜெண்டரி கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசியுள்ளார். டெஸ்ட்டில் 15, 921 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 18, 426 ரன்களும் குவித்து உலக சாதனை படைத்துள்ளார்.
51 வயதாகும் சச்சின் டெண்டுல்கருக்கு சாரா டெண்டுல்கர் (27) , அர்ஜுன் டெண்டுல்கர் (25) இருக்கிறார்கள்.
மகன் அர்ஜுன் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுகிறார். மகள் சாரா டெண்டுல்கர் லண்டனில் முதுகலைப் பட்டம் முடித்துள்ளார். இன்ஸ்டாவில் 7.1 மில்லியன் (71 லட்சம்) ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார்.
விரைவில் நடிகையாக நடிப்பாரென பலரும் எதிர்பார்த்திருக்கும் வேளையில் அவர் சச்சின் டெண்டுல்கர் தொண்டு நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.
செப்.2019 முதல் சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை (எஸ்டிஎஃப்) இயங்கிவருகிறது. இந்த நிறுவனம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உதவி வருகிறது.
இந்த நிலையில் சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
எனது மகள் சாரா டெண்டுல்கர் எஸ்டிஎஃப்பின் இயக்குநராக சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சாரா, லண்டனில் உள்ள பல்கலை. கல்லூரியில் மருத்துவ, பொது சுகாதார ஊட்டச்சத்து துறையில் முதுகலை பட்டம் முடித்துள்ளார்.
இந்தப் பயணத்தை தொடங்குவதன் மூலம் குழந்தைகளின் முன்னேற்றதுக்கு உதவும் வகையில் கல்வி, விளையாட்டு, உலநலத்துக்கு சேவை செய்வதால் உலகளாவிய கற்றல் முழுமையடையும் என்றார்.