செய்திகள் :

ஆன்லைன் செயலி மூலம் மருந்துகள் விநியோகம் செய்ய திமுக எம்.பி. எதிர்ப்பு

post image

நமது நிருபர்

"ஸ்விகி' உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனங்கள் மருந்துகள் விற்கும் செயல்பாடுகளை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினரும் மருத்துவருமான கனிமொழி என்விஎன் சோமு புதன்கிழமை வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:

ஸ்விகி மற்றும் வீடுகளுக்கு டெலிவரி சேவை வழங்கும் பிற நிறுவனங்கள் மருந்துகளை விற்பனை செய்வது துரதிருஷ்டவசமானது மற்றும் கவலை அளிக்கிறது. உணவு விநியோக நிறுவனத்தால் 10 நிமிஷங்களில் மருந்து விநியோகம் செய்வது மருத்துவ மற்றும் மருந்தக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

ஆன்லைன் விற்பனை கடைகள் மூலம் நிமிஷங்களுக்குள் மருந்துகளை டெலிவரி செய்வதை இலக்காகக் கொண்டுள்ள ஸ்விகியின் மளிகைப் பிரிவான இன்ஸ்டாமார்ட், மின்னணு மருந்தகங்களின் பெருநிறுவனமான இ-ஃபார்மஸி, ஃபார்மா ஈசி ஆகியவற்றுக்கு இடையேயான சாத்தியம் மிக்க ஒத்துழைப்பு குறித்து அகில இந்திய மருந்தக மற்றும் மருந்து தயாரிப்பு நிபுணர்கள் அமைப்பு (ஏஐஓசிடி) தீவிர கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.

இது ஓர் ஆபத்தான மாதிரி மட்டுமின்றி நோயாளியின் பாதுகாப்புக்கு முக்கியமான அத்தியாவசிய ஒழுங்குமுறை சோதனை முறைகளை மீறும் செயல்பாடாகலாம். இந்தியாவில் மருந்துகளின் விநியோகம் என்பது, மருத்துவரின் மருந்துகள் பரிந்துரை சீட்டு, நோயாளிகளை அடையாளம் காணுதல், நுகர்வோருக்கு தீங்கு விளைவிக்காத நடைமுறையை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கடுமையான நெறிகளுக்கு உள்பட்டது.

இந்தப் பாதுகாப்பு அம்சங்களுடன் துரித டெலிவரி காலக்கெடுவின்கீழ் இயங்கும் நிறுவனங்களின் சேவை சமரசம் செய்யக்கூடும் அச்சம் உள்ளது.

துரித டெலிவரி மாடலில், காலாவதி அல்லது போலி மருந்துகளின் புழக்கம் அதிகரிக்கலாம், இது நோயாளியின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும். தேவையான தரநிலைகளை பின்பற்றுவது இயலாமல் போகும்.

எனவே, ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மூலம் 10 நிமிங்களில் மருந்துகளை விநியோகிக்கப்படும் ஆபத்தை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் கனிமொழி என்விஎன் சோமு.

மிந்த்ரா நிறுவனத்தை ஏமாற்றி ரூ. 1.1 கோடி மோசடி!

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான மிந்த்ரா நிறுவனத்தின் ரீஃபண்ட் (பணம் திருப்பிச் செலுத்துதல்) வசதியைப் பயன்படுத்தி ரூ. 1.1 கோடிக்கும் மேல் ஒரு கும்பல் மோசடி செய்துள்ளனர். மிந்த்ரா நிறுவனம் கடந்த மார்ச் முதல்... மேலும் பார்க்க

'அதானி விவகாரம் பற்றி விவாதிக்க பாஜக அரசு பயப்படுகிறது' - பிரியங்கா காந்தி

அதானி விவகாரம் பற்றி விவாதிக்க பாஜக அரசு பயப்படுகிறது என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியுள்ளார். நாட்டில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களுக்கு பல்வேறு மாநில மின்பகி... மேலும் பார்க்க

மும்பையில் மின்சார பேருந்து விபத்து: பலி 7 ஆக அதிகரிப்பு

மும்பையில் மின்சார பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நடைபாதையில் ஏறியதில் 7 பேர் பலியாகியுள்ளனர். 42 பேர் காயமடைந்தனர்.மும்பையில் மின்சார பேருந்து நடைபாதையில் இருந்தவர்கள் மீது மோ... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைப்பு!

அதானி லஞ்ச விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.நாட்டில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய ... மேலும் பார்க்க

விஹெச்பி மாநாட்டில் நீதிபதி: உச்சநீதிமன்ற நீதிபதிக்கு பிரசாந்த் பூஷண் கடிதம்!

விஹெச்பி மாநாட்டில் கலந்துகொண்ட அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.உத்தர பிரதேச மாநில... மேலும் பார்க்க

கேஜரிவாலுக்கு விரைவில் அரசு குடியிருப்பு ஒதுக்கப்படும்: கட்டார்

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவாலுக்கு விரைவில் அரசு குடியிருப்பு ஒதுக்கப்படும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் செவ்வாய்க்கிழமை தெரிவி... மேலும் பார்க்க