செய்திகள் :

தகுதிவாய்ந்தவர்களுக்கு குடும்ப அட்டைகள்: மத்திய அமைச்சர் விளக்கம்

post image

நமது நிருபர்

தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மட்டுமே குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை இணை அமைச்சர் நிமுபென் பம்பனியா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் குடும்ப அட்டைகளை வழங்க இ-கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் மின்னணு பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு இடங்களுக்கு குடியேறி வந்த உண்மையான குடும்ப அட்டைதாரர்கள் தகுதியானவர்களாக இருந்தபோதும் சரிபார்ப்புக்கு வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளதை மத்திய அரசு அறிந்துள்ளதா என மக்களவையில் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு அமைச்சர் நிமுபென் பம்பனியா அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், "இ-கேஒய்சி நடைமுறை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இதை செய்யாததால் எந்தவொரு குடும்ப அட்டையும் ரத்து செய்யப்படாது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொதுவிநியோக கட்டுப்பாடு ஆணைப்படி, குடும்ப அட்டைதாரர்கள், பயனாளிகள் பட்டியல், தகுதிவாய்ந்தவர்கள், தகுதியற்றோர், போலி அட்டைகள் போன்ற விவரங்களைச் சரிபார்ப்பது மாநிலங்களின் பொறுப்பு.

கள ஆய்வு உள்ளிட்ட சரிபார்ப்பு நடைமுறைகளை மேற்கொண்டு, தகுதிவாய்ந்தவர்களை கண்டறியவும் உண்மையான பயனாளிகள் பட்டியலில் இருந்து இடைநீக்கமோ, நீக்கமோ செய்யப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றார்' அவர்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் காலமானார்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று(டிச. 8) காலமானார்.சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை‌ பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்... மேலும் பார்க்க

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார்: அமைச்சர்

பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி தெரிவித்தார். மேலும் பார்க்க

இளைஞர்களை ஆன்லைன் மோசடியில் ஈடுபடுத்திய நபர்: 2,500 கி.மீ. விரட்டிப்பிடித்த காவல்துறை!

இந்திய இளைஞர்களை சட்டவிரோதமாக ஆன்லைன் மோசடி குற்றங்கள் தொடர்பான வேலைகளில் ஈடுபடுத்திய நிறுவனத்தைச் சேர்ந்த நபரை தில்லி காவல்துறையின் சிறப்புப் படைக் கைது செய்துள்ளனர். கிட்டத்தட்ட 2,500 கிலோமீட்டர்கள்... மேலும் பார்க்க

தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும்: சரத் பவார்

நாட்டில் தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும் என்றும் தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை எனவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று (டிச. 8) தெரிவித்தார். வளர்ந்த ... மேலும் பார்க்க

விவசாயிகள் மீது காவல்துறை பூ மழை! போராட்டத்தில் சுவாரசியம்!

‘தில்லி செல்வோம்(தில்லி சலோ)’ என்ற முழக்கத்துடன் விவசாயிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் மற்றும் பேரணியில் சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.பஞ்சாப் - ஹரியாணா எல்லையான ஷம்பு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

லக்னௌவில் 3 முக்கிய நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

லக்னௌவில் 3 முக்கிய பயணிகள் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை அவசர சேவை எண்ணை தொடர்புகொண்ட மர்மநபர், ... மேலும் பார்க்க