தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
அஸ்ஸாம்: பொதுஇடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை!
அஸ்ஸாம் மாநிலத்தில் உணவகம், விடுதி உள்ளிட்ட பொதுஇடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுடம் முதல்வர் பேசியதாவது,
''கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள 5 கி.மீ சுற்றளவில் மாட்டிறைச்சிக்கு முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். மாநிலம் முழுவதும் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.
இந்தக் கட்டுப்பாடு மாநிலம் முழுவதுமுள்ள உணவகம், விடுதி மற்றும் உள்ளூர் கொண்டாட்ட நிகழ்வு உள்ளிட்ட அனைத்துக்கும் பொருந்தும். விதிகளை மீறுபவர்கள் சட்டத்திற்குட்பட்டு தண்டிக்கப்படுவர்.
அஸ்ஸாமில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பலர் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். ஆனால், இதற்கு முன்பே நாங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளோம். தற்போது பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண முற்றிலுமாகத் தடை விதித்துள்ளோம். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளோம்'' எனக் குறிப்பிட்டார்.