செய்திகள் :

புஷ்பா 2: பார்வை, செவித்திறன் குறைபாடுடையோரும் கண்டுகளிக்க சிறப்பு வசதி!

post image

நடிகர்கள் அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில் கூட்டணியில் உருவான புஷ்பா திரைப்படம் மாநில எல்லைகளைக் கடந்து இந்திய அளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

புஷ்பாவில் அல்லு அர்ஜுனின் ஸ்டைலான நடையும் பாவனையும் உலகம் முழுவதும் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு இணையாக அல்லு அர்ஜுன் மிகப் பிரபலமாகிவிட்டார்.

இந்த நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் உலகம் முழுவதும் நாளை(டிச. 5) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், புஷ்பா-2 திரைப்படத்தை கண் பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடையோரும் கண்டுகளிக்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, புஷ்பா படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத்தை இப்போது ஒவ்வொருத்தரும் பெரிய திரையில் கண்டு ரசிக்கலாம்.

பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடைய பார்வையாளர்களும் புஷ்பா-2 திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியும். இதற்காக ‘கிரேட்டா செயலியில்’ ஒலி விரிவாக்கங்கள் மற்றும் எழுத்துக் குறிப்புகள் (சப் டைட்டில்ஸ்) ஆகியவை வழங்கப்படுகின்றன.

இந்த வசதியை பயன்படுத்த, அவர்கள் செயலியை தரவிறக்கம் செய்து, அதில் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கொண்டு, புஷ்பா படத்தை மேற்கண்ட வசதிகளுடன் தங்களுக்கேற்றாற்போல் அமைத்து படத்தைக் கண்டு மகிழலாம் எனத் தெரிவித்துள்ளது.

ஆண் நண்பர் தோழியுடன் எரித்துக் கொலை! பிரபல நடிகையின் சகோதரி கைது

பாலிவுட் ரசிகர்களிடம் தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகை நர்கீஸ் ஃபக்ரியின் சகோதரியான அலியா ஃபக்ரி(43) இரட்டைக் கொலை வழக்கில் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.அலியா ஃபக்ரிக்கும்(... மேலும் பார்க்க

ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதி விவாகரத்து.!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு சற்றுமுன் அறிவித்துள்ளார். அவரது இந்த சமூக வலைதளப் பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பார்க்க

பிகார்: அல்லு அர்ஜூன் நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்! ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு!

பிகாரில் அல்லு அர்ஜூனை காண கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி பிகார் மாநிலத் தலைநகர... மேலும் பார்க்க

சூர்யாவின் கங்குவா டிரைலர்..!

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா' திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியிடப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளா் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சாா்பில், மாபெரும் பொருள் செலவில் தயாராகியுள்ள கங்குவா ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 4 கோடி பார்வைகளைக் கடந்த கேம் சேஞ்சர் டீசர்!

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டீசர் வெளியான ஒரே நாளில், 4 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளது. கேம் சேஞ்சர் திரைப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித... மேலும் பார்க்க

டெல்லி கணேஷ் மறைவு: மலையாள நடிகர்கள் இரங்கல்!

நடிகர் டெல்லி கணேஷ் (80) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை(நவ. 9) இரவு காலமானார்.தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் டெல்லி கணேஷ். க... மேலும் பார்க்க