தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்!
பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜூனியர் ஆசிய கோப்பையை வென்றுள்ளது.
ஆடவர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டம் இன்று(டிச. 4) நடைபெற்றது. அதில் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான் பலப்பரிட்சை நடத்தியது.
இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் எதிரணியை அடுத்தடுத்து கோல் மழைப் பொழிந்து திணறடித்தனர். இந்திய அணியில் அரைஜித் சிங் ஜண்டல் 4 கோல்கள் அடித்து பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். தில்ராஜ் சிங் ஒரு கோல் அடித்தார்.
பாகிஸ்தான் அணியினர் மொத்தம் 3 கோல்கள் அடித்தனர். இதன் மூலம், இந்திய அணி 5 - 3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.