மக்களே எச்சரிக்கை! அதிக ஆபத்து நிறைந்த உணவாக வகைப்படுத்தப்படும் பாட்டில் குடிநீர்!
இந்தியாவில் பாட்டில் குடிநீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் அதிக ஆபத்து நிறைந்த உணவாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
ஒரு காலத்தில், பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பாக்கெட் குடிநீர் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் வெளியாகி, ஒருவழியாக அதற்கு முடிவுகட்டப்பட்ட நிலையில், தற்போது பாட்டில் குடிநீர் பற்றிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், இதற்கான மாற்று என்ன? தீர்வு என்ன? என்பதுதான் இன்னமும் புதிராகவே உள்ளது.
புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ், பேக்கேஜ் செய்யப்பட்ட பாட்டீல் குடிநீர் மற்றும் சத்துகள் சேர்க்கப்பட்ட குடிநீர் பாட்டில்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் பேக்கேஜ் செய்யும் ஆலைகள் தங்களது குடிநீர் பாட்டீல் உரிமத்தை புதிதாகப் பெற அல்லது புதுப்பிக்கும் முன் மிகக் கடுமையான ஆய்வுகளுக்குள்படுத்தப்பட வேண்டியது கட்டாயமாகிறது.