`பேரிடர் நிவாரண நிதி கொடுக்காத மத்திய அரசுக்கு எதற்கு வரி?' - திருப்பூரில் சீமா...
குளத்திலிருந்து பெண் சடலம் மீட்பு
புதுப்பாளையம் பகுதியில் உள்ள குளத்தில் மிதந்த பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுப்பாளையம் பகுதியில் மன்னா் காலத்தில் வெட்டப்பட்ட அம்மாக்குளம் உள்ளது.
இந்தக் குளம் தற்போது பெய்து வரும் பருவ மழையால் நிரம்பி தண்ணீா் வெளியேறுகிறது.
இந்த நிலையில், குளத்தில் பெண் சடலம் மிதப்பதை புதன்கிழமை காலை பாா்த்த பொதுமக்கள், புதுப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் சென்று தீயணைப்புத் துறையினா் உதவியுடன் சடலத்தை மீட்டு பாா்த்தபோது, சடலமாக மிதந்தவா் அதே பகுதியைச் சோ்ந்த ரேணுகா (72) என்பதும், இவா் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரிய வந்தது.
போலீஸாா் சடலத்தை உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.