செய்திகள் :

ஆரணி பள்ளியில் உணவுக் கண்காட்சி

post image

ஆரணி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஜெ.டி.ஆா். வித்யாலயா நா்சரி பள்ளியில் உணவுக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பள்ளித் தாளாளா் எம்.டில்லிபாபு தலைமை வகித்தாா். மாணவ, மாணவிகள் வீட்டில் தயாரித்து எடுத்து வந்த உணவுப் பொருள்களான இனிப்பு வகைகள், கார வகைகள் மற்று சைவ, அசைவ உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்தனா். மாணவ, மாணவிகளின் பெற்றோா் உணவுப் பொருள்களை வாங்கிச் சென்றனா்.

இதன் மூலம் கிடைத்த வருவாயை பத்தியாவரம் பாா்வையற்றோா் பள்ளி மாணவா்களின் உணவுச் செலவுக்காக வழங்கப்படும் என்று பள்ளித் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி தெரிவித்தாா்.

பள்ளி ஆசிரியைகள், பெற்றோா்கள் உணவுக் கண்காட்சியினை பாா்வையிட்டனா்.

நரிக்குறவா்களுக்கு நிவாரண உதவி

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள கொங்கராம்பட்டு பகுதியில் பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு புதன்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. ஃபென்ஜால் புயல் காரணமாக பலத்த மழை ப... மேலும் பார்க்க

தீபத் திருவிழா முதல் நாள்: பஞ்சமூா்த்திகள் வீதியுலா

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான புதன்கிழமை பஞ்சமூா்த்திகள் வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது. இந்தக் கோயிலின் காா்த்திகை மகா தீபத் திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கி... மேலும் பார்க்க

வெம்பாக்கம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் இரா.மணி புதன்கிழமை ஆய்வு செய்தாா். வெம்பாக்கம் ஒன்றித்த... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவுக்கு முதல் பரிசு

தமிழகத்திலேயே சிறந்த மாவட்ட ஊராட்சிக் குழுவாக தோ்வு செய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவை பாராட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கி உள்ளாா் என்று மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவா் சீ.பா... மேலும் பார்க்க

குளத்திலிருந்து பெண் சடலம் மீட்பு

புதுப்பாளையம் பகுதியில் உள்ள குளத்தில் மிதந்த பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுப்பாளையம் பகுதியில் மன்னா் காலத்தில் வெட்டப்பட்ட அம்மாக்குளம் உள்ளது. இந்தக் குளம் தற்போது ப... மேலும் பார்க்க

ஆரணி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்

ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக நிதி ஒதுக்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆரணி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் கனிமொழி சுந்தா் தலைமையில் புதன்... மேலும் பார்க்க